திருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய பாஜக அரசு திருக்குறளுக்கு ஆதித மரியாதை கொடுத்து திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்று கொண்டுள்ளது. அதை பாராட்டும் சார்பில் தமிழக பாஜக சார்பில் காவி உடையுடன் நெற்றியில் பட்டையுடன் ஒரு படத்தை வெளியிட்டு இருந்தது.அதற்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அது பற்றி அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

பிரிட்டிஷ் அரசு தான், திருவள்ளுவருக்கு முதல் வடிவம் கொடுத்தது. அனைவருக்கும் பொதுவான வள்ளுவரை, அவரவர் விருப்பப்படி பார்ப்பதில் தவறில்லை. திருவள்ளுவர், சைவ அல்லது வைணவ துறவியாக இருக்கலாமே தவிர, நாத்திகராக இருக்க வாய்ப்பில்லை.ஓராண்டில், கீழடியில் உலகத்தரமிக்க அருங்காட்சியகம், 12.20 கோடி ரூபாயில் அமைக்கப்படும். 10 ஆயிரம் பொருட்கள் உலகத்தர அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.