திருநெல்வேலி – திருச்செந்துார் பாதயாத்திரை சாலை

திருநெல்வேலி வழியாக திருச்செந்துாருக்கு பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். தைப்பூசம் போன்ற விழா நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக, சாலைகளில் செல்லும்போது விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதை தவிர்க்க திருநெல்வேலி – திருச்செந்துார் வரை 55 கி.மீ.,க்கு சாலையின் இடது புறத்தில் 8 – 10 அடி அகலத்தில் விரிவுபடுத்தும் பணி நடக்கிறது. பக்தர்கள் நடந்து செல்ல, ‘பேவர்பிளாக்’ கற்கள் மூலம் சிமென்ட் சாலை அமைக்கப்படுகிறது. சென்னை- – கன்னியாகுமரி தொழில் வழித்தடம் திட்டத்தின் வாயிலாக இந்த சாலை பணி நடக்கிறது. இதே போல மதுரையிலிருந்து துாத்துக்குடி வழியாக திருச்செந்துாருக்கு பாதயாத்திரைக்கு பிரத்யேக சாலை அமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர். நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஏற்கனவே மதுரை- – துாத்துக்குடி – -திருச்செந்துார் சாலை விரிவாக்கத்துக்கு திட்டம் உள்ளது. ‘அதில் இத்தகைய பிரத்யேக சாலைகள் அமைக்க வாய்ப்பு உள்ளது’ என்றார்.திருநெல்வேலியில் இருந்து திருச்செந்துாருக்கு முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்ல வசதியாக பிரத்யேகமாக அமைக்கப்படும் சாலை.