திருச்சி பா.ஜ., பிரமுகர் கொலையில் இருவர் கைது

திருச்சி, பா.ஜ., பிரமுகர் கொலை வழக்கில், முகமது பாபு உட்பட இருவரை, சென்னையில் போலீசார் கைது செய்தனர்.திருச்சி, வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரகு, 39. பா.ஜ.,வின் பாலக்கரை மண்டல செயலரான இவர், காந்தி மார்க்கெட் பகுதியில், வாகனங்களுக்கு, பார்க்கிங் கட்டணம் வசூலித்து வந்தார்.

கடந்த, 27ம் தேதி காலை, மார்க்கெட்டில் பணியில் இருந்தபோது, உப்புப்பாறை பகுதியைச் சேர்ந்த முகமது பாபு, 20, என்பவர், விஜய ரகுவை, வெட்டி கொலை செய்து தப்பினார்.காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணையில், விஜயரகுவின் மகளை, முகமது பாபு ஒருதலையாக காதலித்ததோடு, காதலிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளார். இதையறிந்த விஜயரகு, முகமது பாபுவை கண்டித்துள்ளார்.இது தொடர்பான தகராறில், சில மாதங்களுக்கு முன், முகமது பாபு, விஜயரகுவை கத்தியால் குத்தியுள்ளார். இதில், கைது செய்யப்பட்ட முகமது பாபு, ஜாமினில் வந்தார். சம்பவத்தன்று, கூட்டாளியுடன் சென்று, விஜயரகுவை வெட்டிக் கொன்றது தெரிந்தது. குற்றவாளிகளை பிடிக்க, தனிப்படை அமைத்து, போலீசார் தேடி வந்தனர்.

விஜயரகு, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், தேசிய ஆதிதிராவிடர் நல ஆணைய துணை தலைவர் முருகன் நேற்று, அவரது குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறி விசாரணை நடத்தினார்.நிருபர்களிடம், அவர் கூறியதாவது: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காந்தி மார்க்கெட்டில் கடையடைப்புநடத்த முயன்றபோது, போராட்டம் நடத்தக்கூடாது என, விஜயரகு, ‘போஸ்டர்’ ஒட்டியுள்ளார். கேரளாவின், ‘லவ் ஜிகாதி’ போல், விஜயரகுவின் பெண்ணுக்கும் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. விஜயரகுவை கொலை செய்துள்ளனர். இப்பிரச்னையில், ஆணையம் உரிய விசாரணை நடத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.