தாலிபானுக்கு உதவும் சீனா

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரை தாக்கி கொல்ல, தாலிபான்களுக்கு, சீனா உதவிகள் செய்ததாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்க செய்தி நிறுவனம் வெள்ளை மாளிகையில் கிடைத்த தகவலை மையப்படுத்தி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. வழக்கம்போல, சீனா இதனை மறுத்துள்ளது. இதே போன்றதொரு குற்றச்சாட்டு கடந்த வருடம் ரஷ்யா மீது சுமத்தப்பட்டதும் அதனை ரஷ்யா மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.