தவறான வரைபடம் வெளியிட்ட வத்ரா

விவசாய வன்முறை போராட்டம் குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த ராபர்ட் வத்ரா, அதில் முழுமையற்ற பாரத தேசத்தின் வரைபடத்தை வெளியிட்டிருந்தார். அதில் ஆக்கிர மிக்கப்பட்ட காஷ்மீர், அக்ஸாய்சின் உள்ளிட்ட பகுதிகள் இல்லை. பின்னர் இந்த தவறை குறித்து கட்சியினர் கூறியபின் வேறு புகைப்படத்தை வெளியிட்டார். சமீபத்தில் அரசியலுக்கு வரும் தன் ஆசையை ராபர்ட் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.