தமிழ் பாரதம் முழுவதிலும், உலகம் முழுவதிலும் வாழ்க!

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகம், உலகத் தமிழாராச்சி நிறுவனம், தமிழ் இணையப் பல்கலைக் கழகம், திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகம் – என்று தமிழுக்காகவே பல பல்கலைக் கழகங்கள்; அது போக, தமிழகத்திலேயே இரண்டு டஜன் அரசுப் பல்கலைக் கழகங்கள், பல டஜன் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்! எல்லாம் தமிழர் கைகளில். கூடுதலாக  இந்திய மொழிகளுக்கான மத்திய இன்ஸ்டிட்யூட், மைசூரு.

இவற்றில் ஏதாவது ஒரு நிறுவனம் பாரதத்தின் 29 மாநிலங்களிலும் தலா பத்துப் பத்துப் பேருக்கு தமிழ் பேசக்  கற்றுக் கொடுக்க விரலசைத்திருந்தால் அமைச்சர் பாண்டியராஜன் இன்று வந்து ‘தமிழ் பிரச்சார சபை’ அமைப்பது பற்றி பேச வேண்டியிருந்திருக்காது, அல்லவா? (பார்க்க பெட்டிச் செய்தி)

தமிழ் பேச பயிற்சி அளிப்பது என்றால் மலையைப் புரட்டிப் போடுகிற வேலை அல்ல. எளிமையானது. மகிழ்ச்சிகரமானது. எழுதப் படிக்கத் தெரியாதவரும் பத்து நாளில் தமிழில் பேசும் பாக்கியம் பெறலாம். இதற்கான நுட்பம்?

ஒரு தன்னார்வ அமைப்பு பயன்படுத்தும் நுட்பம்தான். ‘பத்து நாளில்  சமஸ்கிருதத்தில் பேசலாம் வாருங்கள்’ என்று கடந்த 35 ஆண்டுகளாக பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் சாமானியர்களுக்கு சமஸ்கிருதம் பேச கற்றுக் கொடுப்பதில் தொடங்கி, தமிழ் போன்றே பாரதம் தந்த செம்மொழியான சம்ஸ்கிருதத்தை வீடுவீடாக கொண்டுபோ சேர்த்திருக்கிறது ‘சமஸ்கிருத பாரதி’ என்ற தன்னார்வ அமைப்பு.

வெற்றிகரமான அந்த மொழிப் பயிற்சி நுட்பத்தை தேசத்தின் பல்கலைக் கழகங்கள் உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியிருப்பது ஆச்சரியமல்ல. பூமிப் பந்தில் பல நாடுகள் அந்த நுட்பத்தை இரு கரம் நீட்டி வரவேற்று சம்ஸ்கிருத ஞானத்தை வளர்த்துக்கொள்ள ஆர்வம் காட்டுவதுதான் அற்புதம்.

சமஸ்கிருத ஆர்வம் போலவே தமிழ் பேசும் அவசியம் உலகின் பல நாடுகளில் அதிகம் அதிகமாக உணரப்பட்டு வருகிறது. பிஜி தீவு நாடு அதற்கு ஒரு உதாரணம். (பார்க்கப் பெட்டிச் செய்தி)

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 11 அன்று கல்லூரி மாணவர் தலைவர்கள் மனதில் ஒரு அற்புதமான யோசனையை விதைத்தார்: அந்த தினம் இந்த தினம் என்று கொண்டாடுவதற்குப் பதிலாக உதாரணமாக ஹரியானா கல்லூரி வளாகத்தில் ‘தமிழ் தினம்’ கொண்டாடலாம். அன்றைய தினம் தமிழ் பாடல்கள், தமிழர் விளையாட்டுகள் இவற்றையெல்லாம் ரசிக்க வாய்ப்பு ஏற்படுத்திக்கொள்ளலாம்…” என்று ஆசைகாட்டியுள்ளார். பாஜக பிரமுகர் தருண் விஜய் சில ஆண்டுகளாக திருவள்ளுவரை கங்கை கரைவரை கொண்டு சென்று தமிழை அகில பாரத அரங்கில் நடுநாயகமாக்க முயற்சி செய்துள்ளது சமீப கால சம்பவம். (பெட்டி செய்தி பார்க்க) சமீப காலத்தில் மட்டுமல்ல, சங்க காலத்திலும் தமிழ் மணம், தமிழ் மனம் இமயம் வரை வியாபித்திருந்தது நமக்கெல்லாம் புதிய செய்தி அல்ல. (பெட்டி செய்தி பார்க்க).

அப்புறமென்ன, பாரதத்தின் பல மொழிக்காரர்களான நம் சகோதர சகோதரிகளின் நாவில் தமிழ் நடம்புரியச் செய நல்லநாள் பார்க்க வேண்டிய அவசியம்தான் என்ன?

ஒரு முறை அந்த அன்பர்கள் பாலும் என்ற துதியையோ, துப்பார்க்குத் துப்பாய” என்ற தண்ணீரின் அருமை பேசும் குறளையோ மழலையாகவேனும் உச்சரித்துவிட்டார்கள் என்றால் அவர்களின் உள்ளங்களைத் தமிழ் கொள்ளைகொண்டுவிடும்.

ஒரே கல்லில் பல மாங்கனிகள் லாபம்! தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊட்டம். தமிழ்ப் பெருமிதத்துக்கு ஆக்கம்.

அதெல்லாம் சரி, எத்தனை தமிழ் வாத்யாருக்கு வேலை கிடைக்கும்? நிச்சயம் லட்சக் கணக்கான தமிழ் வாத்யார்களுக்கு வேலை உண்டு. பாரத நாடு முழுவதிலும் மட்டுமல்ல பூமிப் பந்தின் தென்புறம் பிஜி தீவு நாட்டிலிருந்து ஆப்பிரிக்காவை ஒட்டிய மொரீஷஸ் நாட்டிலும் மேற்கிந்திய தீவு நாடுகளிலும் ஏராளமான தமிழர்கள் தமிழ் பேசத் தெரியாமல் இருக்கிறார்கள். தமிழ் பேசும் தாகம் அவர்களுக்கு உண்டு என்று உலகம் சுற்றி வந்த சமூக சேவகர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது தமிழ் பேச கற்பித்தல் என்ற திறன் (குடுடிடூடூ) வளர்த்துக் கொள்பவர்களுக்கு வேலை ரெடி.

இப்போது அடுத்த கேள்வி. தமிழ் பேச கற்பிக்குத் திறனை எப்படி வளர்த்துக்கொள்வது. இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள். நாளைய இளைஞர்கள் தான் தமிழ் பேச கற்பிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்றைய குழந்தைகளோ துவக்கப் பள்ளி வகுப்புகளில் தமிழ் கற்றுக்கொள்ளும் லட்சணம் சந்தி சிரிக்கிறது. என்ன செய்யலாம்?

இந்த கவலையைப் போக்கும் விதத்தில் வருகிறது நவோதயா பள்ளிகள். நவோதயா பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை முதல் மொழிப் பாடம் தமிழ். எனவே தமிழ் பேச கற்பிக்கும் ஆர்வம் வளர்த்துக்கொள்ள ஆயிரம் மடங்கு வாய்ப்பு அதிகரிக்கிறது.

பார்ப்போம், தமிழக பிள்ளைகள் வருகிற வாய்ப்பை பயன்படுத்தி தமிழ் பேச கற்பிக்கும் திறன் வளர்த்துக்கொண்டு தேசம் முழுவதும் அல்ல, உலகம் முழுவதும் பரவிச் சென்று வெற்றிக்கொடி நாட்டுகிறார்களா இல்லையா என்று. டூ

 

 

தமிழ் பேசாத பிஜி தமிழர்கள்

1984ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்குப்படி பிஜி தீவில் 50,000 தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5,000 பேர்களுக்கு மட்டுமே ஓரளவு தமிழ் எழுதவும் படிக்கவும் தெரியும். மற்றவர்களுக்குத் தமிழ் பேசக் கூடத் தெரியாது. பிஜித் தீவில் உள்ள தமிழ் இளைஞர்களுக்கு தமிழ் தெரியாது. 50 சதவீதத்திற்கு மேற்பட்ட தமிழர் வீடுகளில் தமிழ் பேசப்படவில்லை.

இங்கு வாழும் தமிழர்கள் தங்கள் பெயருடன் சாதிப் பெயர்களையும் சேர்த்துக் கொள்கின்றனர். பிள்ளை, மூப்பனார், கவுண்டர், நாயுடு என்னும் பெயர்கள் இங்கு பிரபலம். பெரும்பான்மையினர் இந்து சமயத்தினர் ஆவர். இந்து சமய வழிபாட்டில் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். தைப்பூசம், சிவராத்திரி போன்ற பண்டிகைகளை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். 1958 முதல் ‘மித்திரன்’ என்ற எட்டு பக்க கையெழுத்து ஏடு நடத்தப்பட்டு வருகிறது. சுவாமி ருத்ரானந்தா ‘சங்கம்’ என்ற மாதப் பத்திரிக்கையைக் கொண்டு வந்தார். கே.ஆர். பண்டாரம் என்பவர் தொடக்க காலத்தில் தமிழ்த் திரைப்படங்களை வரவழைத்து காண்பித்தார். அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. தற்போது தமிழ் வீடியோ திரைப்படங்கள் வரவழைக்கப்பட்டு பெரும்பாலோரால் பார்க்கப்படுகிறது.

 

 

மாபா பாண்டியராஜனின்  தமிழ் பிரசார சபா

ஆங்கிலத்தை 33 கோடி பேர் தாமொழியாக கொண்டுள்ளனர். ஆனால் அதை 2ம் மொழியாக 77 கோடி பேர் கற்றறிந்துள்ளனர். அதுபோல ஒன்பதரை கோடி பேர் தமிழை தா மொழியாக கொண்டுள்ளனர். தமிழை 2ம் மொழியாக கற்போரின் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ஹிந்தி பிரசார சபா போல தமிழ் பிரசார சபா ஏற்படுத்தப்படும். இப்பணிகளுக்காக 60 கோடி ரூபா பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலையில் தமிழ் ஆவு மையம் அமைக்கப்படும். உலக தமிழ் சங்கம் சார்பில் மின்னிதழ் விரைவில் வெளியாகும். தீக்கிரையான யாழ்பாண நூலகத்தை மேம்படுத்த உதவி செயப்படும். ஆறு கோடி ரூபாயில், உலகத் தமிழ்ச் சங்கத்தில், பத்து லட்சம் புத்தகங்கள் கொண்ட பிரமாண்ட நூலகம் விரைவில் அமைக்கப்படும்

(மதுரையில் செப்டம்பர் 1 அன்று உலக தமிழ்ச் சங்கத்தை பார்வையிட்டு அமைச்சர் மாபா பாண்டியராஜன்)