இந்த விஜயதசமியில், குடிமக்களின் தனிப்பட்ட குணநலன்களை பண்படுத்தி ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மேற்கொள்ளும் இடைவிடாத தேசக் கட்டமைப்புப் பயணத்தின் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது
இத்தனை ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் மக்களுக்கும், நாட்டிற்கும் மகத்தான சேவையைச் செய்துள்ளது. தேசமோ அல்லது அதன் எந்தப் பகுதியோ பூகம்பம், பேரழிவு தரும் வெள்ளம், புயல், நிலச்சரிவு அல்லது தொற்று நோய்கள் போன்ற இயற்கை பேரிடரைச் சந்தித்த போதெல்லாம், பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நிவாரணம் வழங்குவதற்கும் முதலாவதாக செயல்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம் சேவகர்கள். அடர்ந்த காடுகள், மலைகளில் உள்ள பழங்குடி கிராமங்கள் மற்றும் வடகிழக்கின் சர்வதேச எல்லைகளில் உள்ள தொலைதூர அணுக முடியாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு சேவையாற்ற ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் தங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்தனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு பல தசாப்தங்களாக அரசாங்கம் எட்ட முடியாத நாட்டின் பல்வேறு பகுதிகளில். குடிமக்களிடையே தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்.எஸ்.எஸ். வழங்கிய பங்களிப்புகள் ஈடு இணையற்றவை. தனது பயணம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் சுதேசி மற்றும் சமூக நீதிக்காக தீவிரமாக குரல் கொடுத்து வருகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், பாரத மாதாவுக்காகவும், இந்த மகத்தான தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகவும் தனது ஒட்டுமொத்த வாழ்க்கையை அர்ப்பணித்த ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் அவர்களுக்கும், தன்னலமின்றி தியாகம் செய்த எண்ணற்ற ஸ்வயம்சேவகர்களுக்கும் எனது மனமார்ந்த மரியாதையை செலுத்துகிறேன். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.