தமிழகம் வரும் பிரதமர்

தமிழகத்தின் திண்டுக்கல் அருகேயுள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழா ஆகியவவை வரும் 11ம் தேதி நடைபெறுகின்றன. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, 50 பேருக்கு முனைவர் பட்டங்களையும், பல்வேறு பாடப்பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பட்டங்களையும், தங்கப் பதக்கங்களையும் வழங்கி உரையாற்றவுள்ளார். இந்த விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த விழாவுக்காக பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து மாலை 3 மணி அளவில் தனிவிமானம் மூலம் வருகிறார். இதனை முன்னிட்டு விழா மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. முன்னதாக அன்றைய தினம் பெங்களூருவில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று சென்னை மைசூரு இடையேயான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரெயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதுடன் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையத்தையும் திறந்து வைக்கிறார். விமான நிலையத்தின் அருகே அமைக்கப்பட்டு உள்ள 108 அடி உயர கெம்பேகவுடா சிலையை திறந்து வைத்து அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் உரையாற்றுகிறார்.