ஞானவாபியில் சிவலிங்க வழிபாடு

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டியுள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி தலத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு ஹிந்துக்கள் ஆகம விதிப்படி மத வழிபாடுகள் மற்றும் சடங்குகளை செய்ய அனுமதிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி ஸ்தல்லின் தலைவர் ராஜேஷ் மணி திரிபாதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘சிரவண மாதம் தொடங்குவதால், ஹிந்துக்கள் பூஜை செய்து தங்கள் உரிமையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க நடத்தப்பட்ட ஆய்வின்போது கண்டறியப்பட்ட சிவலிங்கம் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மதச் சடங்குகளைச் செய்ய மனுதாரர் விரும்புகிறார்’ என்று கூறப்பட்டுள்ளது.