ஜனாதிபதி மீது வழக்கு தொடர்வதா? கேரள அரசுக்கு பா.ஜ., கண்டனம்!

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபையில், பல்கலை சட்ட திருத்த மசோதா, கேரள கூட்டுறவு சொசைட்டி திருத்த மசோதா உட்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களில், ஏழு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் தாமதம் செய்தார். அவற்றை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்பி வைத்தார்.

அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஜனாதிபதி திரவுபதி முர்மு காலம் தாழ்த்தி வருவதால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

சட்டசபையில் நிறைவேறிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆரிப் முகமது கானின் செயலை சட்டவிரோதமாக அறிவிக்கும்படியும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., எப்போதுமே பெண்களுக்கு எதிரான கட்சியாகவே இருந்து வந்துள்ளது. கடந்த 2022 வரையில், அக்கட்சியின் செயற்குழுவில் பெண்கள் இடம் பெற்றதில்லை. அவர்கள் பெண்களுக்கு மட்டுமின்றி பழங்குடியினருக்கும் எதிரான நிலைபாடு கொண்டவர்கள். திரவுபதி முர்மு ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதை அவர்கள் எதிர்த்தனர். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, அவர்கள் ஜனாதிபதிக்கு எதிராக ஏன் வழக்கு தொடுக்கின்றனர் என்பது தெளிவாக புரியும்.

மசோதாக்கள் கிடப்பில் போடப்படுவது முதல்முறை அல்ல. ஆனால், ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவது இதுவே முதன்முறை. சமூகநீதி மற்றும் சமத்துவத்தை காக்க நினைக்கும் மக்கள், ஜனாதிபதி முர்முவை அவமானப்படுத்தும் நடவடிக்கையை ஏற்க மாட்டர். இவ்வாறு அவர் கூறினார்.