சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது டிரம்ப்க்கு புதியதல்ல. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டன் சென்றதையடுத்து டிரம்ப் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய கருத்தால் ஏற்கனவே இருக்கும் இந்தோ – அமெரிக்க வர்த்தக உறவுகளில் சிக்கலில். இது மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். டிரம்பின் செயலற்ற மற்றும் சீரற்ற வெளியுறவுக் கொள்கை இப்போது நட்புநாடுகளையும், அமெரிக்காவுடனான உறவுகளை பாதிக்கிறது. டிரம்பும், இம்ரான்கானும் சந்திப்புக்குப் பின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப், நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்தபோது இந்த விஷயத்தைப் பற்றி பேசினோம் என்று கூறினார். காஷ்மீரை பற்றி கூறினார். என்றும் பிரதமர் மோடி, காஷ்மீர் பிரச்சினையை டிரம்பிடம் கூறி, அதற்கு மாத்தியஸ்தராக டிரம்பை அழைத்ததாகவும் டிரம்பும் அதை ஏற்றுக்கொண்டதாகவும் பொய்யான தகவலை, டிரம்ப் கூறியுள்ளார். தெற்கு ஆசியாவை அறிந்த எந்த ஒரு நாடும் நன்கு அறியும் காஷ்மீர் பற்றியான பாரதத்தின் கருத்து. அப்பொழுது ஒரே நிலைப்பாடாகத்தான் இருக்கிறது. பாகிஸ்தானுடன் பாரதம் மட்டும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமே தவிர மூன்றாம் நாட்டின் மத்தியஸ்தை எப்போதும் ஏற்க மாட்டாது என்று தெளிவாக கூறியுள்ளது.