சேலம் பெரியார் பல்கலைகழகத்துக்கும் ஈ.வெ.ரா. பெரியாருக்கும் என்ன சம்பந்தம்

சேலம் பெரியார் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த விழாவில் பெரியாரின் சிலைக்கு பின்னால் வண்ண விளக்குகளால் (சீரியல் லைட்) அலங்கரிக்கப்பட்ட ஸ்வஸ்திக் சின்னம், விநாயகர் படம், திரிசூலம் போன்ற படங்கள் இடம் பெற்றிருந்தது அவமானம் என்று தி.க. தலைவர் வீரமணி விடுதலை பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்தார்.

அதற்கான விஜயபாரதம் பதில்

சேலம் பெரியார் பல்கலைகழகம்  ஒன்றும் ஈவேரா வின் பரம்பரை சொத்து  அல்ல. சமீப காலமாக தலைவர்கள் பெயரில் உள்ள  பல்கலைகழகங்கள் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருவதை தி.க வீரமணிக்கு தெரியுமா?

சேலம் பல்கலைக்கழகத்திற்கு பெரியார் பெயர் வைத்திருப்பதனால் பல்கலைக்கழகமும் நாத்திக கொள்கையை கொண்டது என்று வீரமணி கருதுகிறாரா ?

ஒருவருடைய பெயரை பல்கலைக்கழகத்திற்கு வைத்திருப்பதினால் அவர்களின் கருத்துக்களையும் கொள்கைகளையும் பரப்ப வேண்டும் அல்லது அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமல்ல.

சில சுயநல அரசியல்வாதிகளால் வேண்டுமென்றே அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப பல்கலைக்கழகத்திற்கு பெயரிடுகின்றனர்.  பல்கலைக்கழகங்களும் அவர்களின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படாது. மாறாக ஆட்சிமன்றக் குழு முடிவு எடுத்துதான் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமிக்கப்படுகின்றனர். இப்படி நியமிக்கப்பட்ட நபரோடு  கலந்தாலோசிப்பதை எப்படி எதிர்க்க முடியும். பெரியாரின் பெயர் வைத்த வைத்திருப்பதனால் வீரமணியிடம் ஆலோசனை கேட்டு தான் பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என நினைக்கிறாரா?