சென்னை டூ அயோத்தி நேரடி விமான சேவை

சென்னையில் இருந்து அயோத்திக்கு  (பிப்.,01) முதல் நேரடி விமான சேவை துவங்கப்பட்டது.

அயோத்தி செல்லும் ராம பக்தர்கள் வசதிக்காக, சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடி விமான சேவை துவங்கப்படும் என்று, ‘ஸ்பைஜெட்’ விமான நிறுவனம், ஏற்கனவே அறிவித்தது.

அதன்படி சென்னை – அயோத்தி – சென்னை இடையே, நேரடி விமான சேவை நேற்று துவங்கியது. முதல் நாளில், 100க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த விமான சேவை தினம் உண்டு. சென்னையில்இருந்து தினமும் பகல் 12:50க்கு புறப்படும் விமானம், மாலை 3:25 மணிக்கு அயோத்தி சென்றடையும். மாலை 4:10க்கு அயோத்தியில் இருந்து புறப்பட்டு, மாலை 6:40 மணிக்கு, சென்னை வந்தடையும்.

இந்த விமானத்தில் ஒருவருக்கு குறைந்தபட்ச டிக்கெட் கட்டணம் 5,810 ரூபாய். அத்துடன் வரிகள் தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பயணியர் எண்ணிக்கை டிக்கெட் முன்பதிவு நேரம் போன்றவற்றுக்கு தகுந்தார் போல, டிக்கெட் கட்டணம் மாறுபடும்.