சீன நிறுவனங்களுக்கு தடை

அமெரிக்கா சமீபத்தில் 35 சீன நிறுவனங்களை கம்யூனிஸ்ட் சீன நிறுவனங்கள் பட்டியலில் இணைத்தது. அவை சீன ராணுவத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றன அல்லது சொந்தமாக நடத்தப்படுகின்றன. இதில் சில நிறுவனங்கள் பாரதத்தில் இயங்குகின்றன அல்லது பாரத சந்தையில் நுழைவதற்கு முயற்சிக்கின்றன என்று சண்டே கார்டியன்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க கருவூலத் துறையின் நிதி புலனாய்வு அமலாக்க நிறுவனமான வெளிநாட்டு சொத்துக் கட்டுப்பாடு (OFAC) அலுவலகத்தால் இந்த நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த சீன நிறுவனங்கள் தங்கள் நாட்டு ராணுவ வளர்ச்சிக்கு இதில் கிடைக்கும் வருமானத்தை பயன்படுத்திக்கொளிக்ன்றன என கூறப்பட்டுள்ளது.