பாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்!!!

சீனாவில் கிறிஸ்தவம் துவம்சம்

சீனாவின் உள்நாட்டு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே மதங்கள் இருக்கின்றன,  மதம் ஒரு அபின் என கூறி,அபினுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக  ஜின்பிங்  தெரிவித்தார்.   சீனாவில் வெளி நாட்டு மதமான கிறிஸ்துவம் ஊடுருவியுள்ளது. 2030-ல் சீனாவின் மக்கள் தொகையில் கிறிஸ்துவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற அச்சத்தின் காரணமாகவே, சர்ச்சுகள் இடிக்கப்பட்டன.  அரசு அனுமதி பெற்று வழிபாடு நடத்தும் கிறிஸ்துவ ஆலயங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டன.

2017 அக்டோபர் மாதம் 7ந் தேதி, சீன அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது மத விவகாரங்களுக்கான அரசுத் துறையின் அனுமதி பெறாமல் மத வழிபாட்டு முறையாகட்டும், மத விழாக்களாக்கட்டும் நடத்தக் கூடாது. என்கிறது அந்த உத்தரவு. எந்த வீடும் வழிப்பாட்டு மையமாக்கப்படக்கூடாது. வீட்டில் உள்ளவர்கள் கூட பைபிள் படிக்க கூடாது, மற்றவர்களுக்கு பைபிள் ஓதக்  கூடாது,  மத சம்பந்தமான பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது, எவரும் தன்னை ஒரு பாதிரியராக அறிவித்துக் கொள்ள கூடாது. மத சம்பந்தமாக வெளி நாடுகளுடன் எவ்வித தொடர்பும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.  இது போன்று 25 நிபந்தனைகளை விதிக்கிறது சீன அரசின் அந்த உத்தரவு:

கம்யூனிஸ்ட் கட்சியினர் கிறிஸ்துவர்களின் இல்லங்களில் உள்ள ஏசுவின் படங்களை அகற்றிவிட்டு, சீன அதிபர் ஜின்பிங்கின் படத்தை வைக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள்.  ஜியாங்கிய மாகாணத்தில்,  யூகன் பகுதியில் 600க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள கிறிஸ்துவ சின்னங்களையும், ஏசுவின் படத்தையும் அகற்றி விட்டு, ஜின்பிங்கின் படத்தையும், கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தையும் வைத்துள்ளதாக  சௌத் சீன மார்னிங் போஸ்ட் என்ற பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது.   2017 ஆகஸ்ட்டில் ஒரு வீடியோ வெளியாகியது, ஏசு எங்களை காப்பார், புல்டோசரிலிருந்து சர்ச்சுகளை யார் காப்பார்கள் என்பது அதன் தலைப்பு!

புதிய உத்தரவின் காரணமாக, சீனாவின் பல மாகாணங்களில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் அடையாளமாக வைத்திருந்த சிலுவை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது.  சில வீடுகள் பிராத்தனை கூடமாக இருந்தன, அவை மூடப்பட்டன. மத விவகாரங்களுக்கான அரசுத் துறையின் அனுமதி பெறாமல் நடத்தப்படும் பிரத்தனை கூடங்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் யென் அபராதமாக விதிக்கப்படுகிறது.   வெளிநாடுகளிலிருந்து கிறிஸ்தவ மத பிரச்சாரத்திற்கு நன்கொடை பெறும் மிஷனரிகளைத் தடை செய்ததுடன், வெளிநாட்டு நிதி பெறுவதையும் சீன அரசு தடை செய்துள்ளது.  வாரத்தின் விடுமுறை நாட்களில் கிறிஸ்துவ பள்ளிகளில் பிரத்தனை நடத்தினால், நடத்தும் ஆசிரியர்கள் தண்டனைக்குள்ளாவார்கள்.

ஆன்லைனில் பைபிள் புத்தகம் விநியோக்கக் கூடாது என அமேசான் உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  ‘‘வெளிநாட்டு மத ஊடுருவல் சக்திகள் சீன சமுதாயத்தின் அனைத்து பகுதிகளிலும் ஊடுருவியுள்ளார்கள்.’’ (Foreign religious infiltration powers have penetrated all areas of the Chinese society) என சீன அரசு தெரிவித்துள்ளது எப்படி இருக்கு?

சீனாவில் இஸ்லாம் தரைமட்டம்

உய்கார் முஸ்லிம்கள் அதிக அளவில் சீனாவில் வாழ்கிறார்கள். இவர்களால் சீனாவின் பாதுகாப்பிற்கு ஆபத்து இருப்பதாக சீன அரசு கருதுகிறது.  1990-ல் சீன எல்லை அருகே அமைந்துள்ள சோவியத் யூனியனில் அங்கம் வகித்த துர்க்கிஸ்தான் கஜகஸ்தான் போன்ற சில பகுதிகள் கலவரத்தில் ஈடுபட்டு, பிரிந்தன; அந்த சம்பவத்தை நினைவுபடுத்தி, உய்கார் முஸ்லிம்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் சீனாவின் மத்திய இன மத விவகாரங்களுக்கான துறையானது ஆயிரக்கணக்கான மசூதிகளை இடித்துள்ளது.  இந்த இடிப்பு மூன்று மாதங்களுக்குள் முடிந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.  பாழடைந்த கட்டிடங்களை இடிக்கும் போது அருகில் உள்ள மசூதிகளும் பாழடைந்த நிலையில் இருப்பதால் இடிக்கப்பட்டதாக, சீன அரசு உய்கார் தன்னாட்சி அமைப்பிடம் தெரிவித்துள்ளார்கள்.  வெள்ளிக் கிழமை தொழுகை நடத்தும் மசூதிகளில் குரான் போதிக்கும் சமயம் கம்யூனிஸத்தையும் போதிக்க வேண்டும் என உத்தரவு!

கிழக்கு துர்க்கிஸ்தான் இஸ்லாமிக் அமைப்பு,  கிழக்கு துர்க்கிஸ்தான் விடுதலை அமைப்பு, உலக உய்கார் காங்கிரஸ் என்ற அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் என சீன அரசு அறிவித்துள்ளது.  இவர்கள் தஞ்சம் புகுவது மசூதிகளில்.  அல்காயிதா, தலிபான், ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் உய்கார் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு தொடர்ப்பு இருக்கிறது என்றும்,  ஜிங்ஜாங் மாகாணத்தில் நடந்த வன்முறை தாக்குதலின் போது, அல்காயிதா விடுத்த செய்தியில், சீனர்களுக்கு எதிராக நடக்கும் ஜிகாத்திற்கு முழு ஆதரவு என கூறியது.  இதன் காரணமாகவே முஸ்லிம்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஜிங்பின் இறங்கியுள்ளார்.

கஷ்கர் பகுதியில் மசூதி சீர்திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களை பாதுகாக்க 70 சதவீத மசூதிகள் இடிக்கப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தார்கள்.   தனியார் நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 5,000 மசூதிகள் இடிக்கப்பட்டன. உள்ளூர் காவலர்கள் துணையோடு மத வெறுப்பு பிரச்சாரத்தையும் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்து வருகிறார்கள்.  மதத்தை முழுவதுமாக எதிர்க்கிறோம், மத நம்பிக்கை எங்களிடம் கிடையாது. எனவே சீனாவில் வசிப்பவர்கள் கம்யூனிஸ்ட்டாக தான் இருக்க வேண்டும், மதவாதியாக இருக்க கூடாது என்ற பிரச்சாரம் தொடர்ந்து நடைபெறுகிறது. ஆகவே முஸ்லிம்களை ஒடுக்குவதில் சீனா மும்முரமாக உள்ளது.

 

பாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்

இந்தியாவில் உள்ள இடது, வலது கம்யூனிஸ்ட்கள், தங்களின் எஜமானர்களின் தேசத்தில் கிறிஸ்தவமும் இஸ்லாமும் படும் துயரங்களை கண்டு கொள்ளாமல்  இந்தியாவில் சகலவிதமான உரிமைகளுடனும், சலுகைகளுடனும் வாழும் சிறுபான்மையினர் துன்ப படுவதாக கூச்சலிடுகிறார்கள்.  நாடு விடுதலை பெற்ற போது, ஹிந்துக்கள் பெருவாரியான மக்களாக வாழ்ந்த வடகிழக்கு மாநிலங்கள், கடந்த ஐம்பதாண்டுகளில் கிறிஸ்தவர்கள் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது.   மே.வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களில் முஸ்லிம்களின் வாக்கு மட்டுமே வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதால், தேசத்தின் ஒற்றுமைக்கு ஆபத்து என தெரிந்தும், வக்காலத்து வாங்கும் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள், சீனாவில் ஆயிரக்கணக்கான மசூதிகளை இடிக்கும் போது வாய் திறக்கவில்லை.  இதே தோழர்கள் பாலஸ்தீனத்தில் குண்டு வெடித்தால், தமிழகத்தில் ஆர்பாட்டம் செய்ய இறங்குவார்கள்.  மாறாக சீனாவில் பைபிள் வாசிக்க தடைவித்தபோது, புத்தராக காட்சி தருகின்றன இந்த சுயநல கும்பல்!

இடதுசாரி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள முஸ்லிம்களின் சிந்தனையே வேறுவிதமானது.  தேசியவாதம் என்பது மதத்திற்கு அப்பாற்பட்டதாக கருதுபவர்கள் கம்யூனிஸ்ட்கள். மாறாக கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள முஸ்லிம்களின் பார்வை எப்படி? இந்திய தேசியம் என்பது முதலாளித்துவ தேசியமாம், அதுதான் ஹிந்து தேசியம் என வாதிடுவார்கள்.   அதே சமயத்தில்  முஸ்லிம்களின் தேசியம், அரபு தேசியம் என்றும் அதுவே முஸ்லிம் தேசியம் என்றும் அளப்பார்கள். முஸ்லிம் வாக்குக்காக இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, 1989 ஏப்ரல் 28 அன்று  நடுநிலைப் பள்ளிகளுக்கு ஒரு சுற்றிக்கை விடப்பட்டது. வரும் காலங்களில் வரலாற்று பாட புத்தகத்தில் மத்திய இந்திய வரலாறுக் கற்பிக்கத் தேவையில்லை, நீக்கிவிட வேண்டும் என்று கூறியது அந்த சுற்றறிக்கை. காரணம் இந்திய வரலாற்றில் மத்திய கால வரலாறு என்பது முஸ்லிம்களின் அட்டூழியங்கள் அடங்கிய பகுதி என்பதால் முஸ்லிம்களுக்கு ஏற்ப நீக்கப்பட்டது.  இதுதான் மார்க்கிஸ்ட் தோழர்களின்் மதசார்பின்மை லட்சணம்.

இந்தியாவின் ஒற்றுமைக்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்து ஏற்படுத்தும்விதமாக, பங்களாதேஷ் நாட்டிலிருந்து லட்சக்கணக்கானவர்கள் ஊடுருவியபோது வாய் திறக்காத தோழர்கள்,  அகதிகளாக துரத்தப்பட்ட ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக குடியுரிமை வழங்க அரசு முற்பட்டால், மதசார்பின்மைக்கு ஆபத்து என கூச்சல் போடுவார்கள். இதற்கும் சில அரசியல் கட்சிகள் கும்மி அடிக்கும்.

இங்கே இடதுசாரிகள்,  தீவிரவாதிகளை கொண்டாடுவதும், பயங்கரவாத செயலுக்கு வக்காலத்து வாங்குவதும் தங்களது கடமையாக கருதி செயல்படுகிறார்கள்.  பயங்கரவாதத்தை ஒழிக்க, ஜிகாதிகள் தங்கும் மசூதிகளை இடித்தால், சீனாவால் அது தேசப் பற்று. இந்தியாவில்  மசூதிகளில் சோதனை நடத்த முற்பட்டால் ‘மதசார்பின்மைக்கும், சிறுபான்மையினருக்கும் ஆபத்து’ என்று கூச்சல்! சீனாவிலும், ரஷ்யாவிலும் இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டாலும், தாக்கப்பட்டாலும், மதசார்பின்மை செங்கொடியின் பின்னால் மறைந்து விடும்.

 

2 thoughts on “பாரதத்தில் சீன அடிவருடிகள் பகல் வேஷம்!!!

  1. அடிவருடி களின் முகத்திரையை கிழித்து எறிய வெகு சில பத்திரிகை கள் தான்… அவற்றில் விஜயபாரதத் திற்கு மக்கள் மத்தியில் முக்கிய மான இடம் உண்டு.இது மாதிரியான ஒரு செய்தி தளம் இல்லையே என்று தேடிகொண்டுகொண்டுஇருந்த போது மாமருந்துபோல கிடைத்துள்ளது . தொடரட்டும் “ஆன்மீக அரசியல்”

  2. இவ்வளவு நிகழ்வுகள் சீனாவில் நடக்கிறது ஆனால் இந்தியாவிலுள்ள கம்யூனிஸ்ட்டுகள்(A B C… Z) மூச் விடாமல் உள்ளனர் ஊடகங்கள் இது தொடர்பாக ஒரு கேள்விகூட கேட்க முதுகெலும்பில்லாமல் இருக்கின்றன(விஜயபாரதம், பாஞ்சஜன்யம் ORGANISER போன்ற சில ஊடகங்கள் தவிர்த்து) உண்மையில் இந்திய ஊடகங்கள் ஊடகங்கள் தானா ? இது ஒருபுறம் கம்யூனிஸ்ட்டுகளுடன் ஒட்டி உறவாடி நட்பு பாராட்டும் கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு இச்சீன நிகழ்வுகள் தெரியாதா ? ஒருவேளை தெரிந்தும் நட்பு பாராட்டுகிறார்கள் என்றால் ! அது என்னமாதிரியான நட்பு அதையும் விஜயபாரதம் விலாவாரியாக விளக்கி ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை வெளியிட்டால் இவர்களிடம்(கம்யூனிஸ்ட்டுகள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள்) கண்ணைமூடி ஏமாறும் வெகுஜன சாமான்ய மக்கள் எச்சரிக்கையாக இருப்பர் மகிழ்ச்சி(நன்றி) விஜயபாரதத்திற்கு வாழ்க வளர்க விஜயபாரதம் பாரதத்தின் வீடு(குடும்பம்)தோறும் ஒரு விஜயபாரதம் இதழ் செல்ல வாழ்த்துக்கள்

Comments are closed.