அணிலுக்கும் அருளிய ஆன்மிக இமயம்

ரமண மகரிஷி அன்றாடம் ஆசிரமத்திற்கு வரும் ‘அணில்’ பிள்ளைகளுக்கு முந்திரி பருப்பு அளிப்பார். ஒருநாள் முந்திரி பருப்புக்கு பதில் வேர்க்கடலையை ஊட்டினார். அணில்கள் அதை உண்ண மறுத்ததோடு குழந்தையைப் போல் அடம்பிடித்து ரமணர் மேல் தாவி தாவிக் குதித்து ‘கீச்… கீச்’ என்று கத்திக்கொண்டே இருந்தன.

ரமணர், சமையல் அறையிலிருந்த தன் தொண்டரிடம் முந்திரிப்பருப்பு கொண்டு வருமாறு கூறினார். தொண்டரோ சிறிதளவு முந்திரி பருப்பை கொண்டு வந்து கொடுத்தார். ‘இவ்வளவு தானா’ என்று மகரிஷி கேட்க,  ‘பாயாசத்திற்கு போட கொஞ்சம் உள்ளது’ என்று தொண்டர் கூறினார்.

இந்த குழந்தைகள் எப்படி பசியில் தவிக்கின்றன என்று பார்,  பாயாசத்திற்கு முந்திரி அவசியமா?” என்று கேட்டார் ரமணர். உடனே தொண்டர், சமையலறையிலிருந்து மீதமிருந்த முந்திரிப்பருப்புகளை கொண்டு வந்து கொடுத்தார். மகரிஷி அன்பாய் அணில்களுக்கு ஊட்டினார்.

மறுநாள் பக்தர் ஒருவர் இரண்டு பெரிய பொட்டலங்களில் முந்திரிப்பருப்பு கொண்டுவந்து கொடுத்தார். அணில் பிள்ளைகளுக்கு தேவையானது கிடைத்ததில்  ஸ்ரீரமண மகரிஷி பேரானந்தம் அடைந்தார்.

 எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

 அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்!!!