சீனச் சந்தையை ஆக்ரமிப்போம்!

லைத்தளங்களில் சீனப் பொருட்களை புறக்கணிக்க அறைகூவல் விடுத்து இந்தியா, திபெத் எங்கும் கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூட தெளிவாக சொல்லியுள்ளார். சுயசார்பு பற்றியும் சீனாவை எதிர்கொள்வது பற்றியும் பேசி வருகிறோம். புதிய அரசாங்கமும் அவ்வாறே செயல்படுகிறது. எனில்  நாம் சீனப் பொருட்களை வாங்குவதை நிறுத்தாவிடில் எங்ஙனம் அரசு சக்தியைப் பெறும்? நியாயம் தானே!

சீனப் பொருட்களின் படையெடுப்பு

சீனப் பொருட்கள் என்றால் நம் நினைவிற்கு உடனே வருவது சீனப் பட்டாசுகளே. ஆம். அது மிகப் பெரிய மக்கள் தொகையை பாதிக்கக் கூடியது. 6,000 கோடி ரூபாய் தொழில் அது. இதை நம்பி சிவகாசியில் 300,000 தனி மனிதர்கள் அவர் சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கச் சம்மதமோ? எனினும் இந்த தீபாவளிக்கு ஒரு சில கடைகளில் ‘சீனப் பட்டாசுகள் விற்பனை இல்லை’ என போர்டு வைக்கும் அளவிற்கு விழிப்புணர்வு வந்துள்ளது.

ஆனால் விஷயம் இது மட்டுமல்ல. பிப்ரவரி 2015ல் மட்டும் இரும்பு, எஃகு சாமான்கள் மட்china-goodsடுமே ரூபாய் 5,000 கோடிக்கு சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

சீனப் பொருட்கள் இறக்குமதி அரக்கனின் வீச்சு நம்மால் சாமானியத்தில் புரிந்துகொள்ள இயலாது. சிறு, நடுத்தர நிறுவனங்களின் தயாரிப்பு எலக்ட்ரானிக், எலக்ட்ரிகல் மெஷின்கள், உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை தயாரிப்பு மட்டுமே ரூ.87,000 கோடி என்றால் வியப்பாக இல்லை?

இந்திய மொபைல் போன் சந்தையில் சீனத் தயாரிப்புகள் எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ளன. பட்டு, செருப்பு, பொம்மைகள், வாகன உதிரி பாகங்கள், பீங்கான், கண்ணாடி பாத்திரங்கள், பிளாஸ்டிக் சாமான்கள், சூரிய சக்தி செல்கள் போன்றவை இன்று மட்டுமல்ல, நாளைய சந்தையையும் நமது பொருளாதார முன்னேற்றத்தையும் வெகுவாய் பாதிக்கும்.

என்னதான் வழி?

இதனால் சீனப் பொருட்களை பகிஷ்கரித்தால் மட்டும் போதுமா? வேறு என்ன நடக்கும்?

இந்திய அரசாங்கம் இந்திய தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிப்பதை பரவலாக்க வேண்டும். நமது தொழில் முனைவோர் சூழலில் மாற்றம் வந்துள்ளதை உணர்ந்து உடனே தங்களைத் தயார்படுத்த வேண்டும். அந்நிய நேரடி முதலீட்டாளர்களும் இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும்.

ஏனெனில், உலக வர்த்தக நிறுவன ஒப்பந்தத்திற்கு எதிராக சீனாவை எதிர்க்கவோ பகிஷ்கரிக்கவோ இயலாது, தேவையும் இல்லை. இந்தியாவில் பொருட்களைத் தயாரித்து சீனத்தில் விற்கலாம் – யார் தடுப்பது நம்மை?

இதில் மாற்றம் ஏற்பட நாமும் நம் ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ திட்டத்தில் தொழில் தொடங்கி இந்தியப் பொருட்களைத் தயாரித்து உலகே வியக்குமாறு சந்தைப்படுத்த வேண்டும்.