சிவபக்தராக மாறிய முஸ்லிம் மாணவி

கலைக்கு எல்லையே இல்லை என்று சொல்வதற்கேற்ப, குஜராத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவி ஒருவர் ‘சிவபக்தராக’ மாறியுள்ளார். அவரது பெற்றோரின் எதிர்ப்புகளை மீறி ‘தாண்டவ் நிருத்யா’ நிகழ்ச்சியை நடத்த ஆரம்பித்தார். ரீவா அப்தெல் நாசர் என்ற முஸ்லிம் மாணவி, பரோடா எம்.எஸ் பல்கலைக் கழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக கலை நிகழ்ச்சிகள் பயின்று வருகிறார். ரேவா சர்வதேச அளவிலான நிகழ்ச்சிகளிலும் ‘தாண்டவ் நிருத்யா’ நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கதக் நிருத்யாவில் இவர் பட்டம் பெற்றுள்ளார். மகாசிவராத்திரி நிகழ்ச்சிக்கு முன்னதாக தனது அற்புதமான நடன நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தவர் ரேவா. அது மட்டுமின்றி, 2022ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற வைப்ரண்ட் குஜராத் கல்வி உச்சி மாநாட்டிலும் ரேவா நடன நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய ரேவா, “சிவ தாண்டவ நிருத்யா, நடன நிகழ்ச்சியின் உச்ச கட்டம். எனினும், இந்த நிகழ்ச்சியை எனது தந்தை எதிர்த்தார். ஆனால் எனது தாயார் என்னை ஆதரித்தார்” என்று கூறினார்.