சிதம்பர இரகசியம்

வாசன் ஐ கேர் கண் மருத்துவமனையின் நிர்வாகி ஏ.எம் அருண் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இது தற்கொலை என கருதப்படுகிறது. ஆனால் இது தற்கொலை அல்ல என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

அருணின் தந்தையும், முன்னாள் எம்.பியுமான முருகையாவால் ‘வாசன் மெடிக்கல்ஸ்’ என மருந்து கடையாக திருச்சியில் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் இருபதே வருடங்களில் 170க்கும் மேற்பட்ட கண் மருத்துவமனைகள், 70 பல் மருத்துவமனைகள் என அசுர வேகத்தில் வளர்ந்தது. இதனை அடுத்து பாரதத்தின் பெரும் பணக்காரர்களில் ஒருவரானார் அருண்.

இவர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கும், அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கும் நெருக்கமானவராக அறியப்படுபவர்.

கருப்புப்பண விவகாரங்களில் இவரது பெயர் அடிபட்டது. இதனால் 2015-ல் அமலாக்க துறையும், வருமான வரித்துறையும் அருணின் இல்லம் மருத்துவமனைகளில் சோதனை நடத்தியது. கார்த்திக் சிதம்பரத்தின் ‘அட்வான்ஸ்ட் ஸ்டேடர்ஜிக் கன்சல்டிங்’ நிறுவனம் வாசன் ஐ கேர் நிறுவனம் வழியாக கருப்பு பணத்தை பெற்றது.

ப.சிதம்பரம் மொரீஷியஸ், சிங்கப்பூர் நிறுவனங்கள் வாயிலாக கருப்புப் பணத்தை வாசன் ஐ கேரில் முதலீடு செய்திருந்தார் என 2015ல் வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரைகள் தெரிவித்துள்ளன. இதனை வழக்கம் போல சிதம்பரம் மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணா நகர் ரமேஷ், சாதிக் பாட்சா, விஜய் ஷங்கர் ஐ.ஏ.எஸ், காபிடே சித்தார்த் வரிசையில் இவரும் ஒருவரா என்பது காலம்தான் பதில் சொல்லும்.