அமரர் ஜெயலலிதா நல்லதோர் ஆளுமை!

நல்லதா ஆளுகை?


சினிமா, அரசியல் துறைகளில் தைரியமாக போராடி வெற்றி பெற்ற பெண்மணி, தேசிய நீரோட்டத்தில் இணைந்திருந்தாலும் தமிழகத்தின் உரிமைகளை சற்றும் விட்டுக் கொடுக்காதவர். என பல புகழுரைகளுக்கு ஜெயலலிதா முற்றிலும் பொருத்தமானவர். ஆனால் ஆளுமை வேறு ஆளுகை வேறு என்பதை அறிந்தவர்கள் யாரும் ஜெயலலிதாவின் ஆளுகை துக்ளக் தனமாக இருந்தது என்றுதான் கூறுவார்கள்.

  • மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவந்த ஜெயலலிதாவால் அதை அமல் செய்ய இயலவில்லை, கோயில்களில் மிருக பலி சட்டத்திற்கும் அதே கதிதான். ஒரே தேர்தல் தோல்வியில் அவற்றை விலக்கிக் கொண்டார்.

 

  • ஹிந்துக் கோயில்கள் மீது சிறப்பு கவனம், கோயில்களில் அன்னதானத் திட்டம் என்ற ஜெயலலிதாவின் ஹிந்துத்வத்திற்கும் விவரமற்ற ஹிந்துவின் ஹிந்துத்வத்திற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இருந்ததில்லை. ஜெயலலிதாவின் தெய்வ வழிபாடு பலன் வேண்டி செய்யப்பட்ட வழிபாடே தவிர ஆன்மிக நெறிவளர்க்க செய்யப்பட்ட வழிபாடு அல்ல. எனவே தான் கோயில் சொத்துக்கள் கொள்ளை போவது நிறுத்தப்படவில்லை.

 

  • காஞ்சி சங்கராச்சார்யர் ஜெயேந்திரர் மீது இவர் சுமத்திய கொலைப்பழி தனிநபர் வெறுப்பாலும் பொருளாதாரக் காரணங்களாலும் தான் என்று கூறப்படுகிறது. லட்சோப லட்சம் ஹிந்துக்கள் தங்கள் குருவாய் ஏற்றுக் கொண்ட ஒருவரை இந்த அளவிற்கு யாரும் அவமரியாதை செய்திருக்க முடியாது. கடவுள் அருளால் இன்று ஜெயேந்திரர் குற்றமற்றவர் என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

 

  • அரசே ஆலயத்தைவிட்டு வெளியேறு என ஹிந்துக்கள் போராடி வரும் நிலையில், காஞ்சி மடத்தின் மீது ஏற்பட்ட கோபம் காரணமாகவே ஹிந்து மடங்களையும் ஆசிரமங்களையும் கூட அரசுடைமை ஆக்க வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டது.

 

  • மதரீதியான இட ஓதுக்கீட்டிற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை என்று அறிந்தும் இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தலா மூன்றரை சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனால் தாழ்த்தப்பட்ட ஹிந்து சமுதாயத்தினர் வஞ்சிக்கப்பட்டனர். குமரி மாவட்டத்தில் ஒதுக்கீட்டைத் தாண்டி பயன் அடைந்துவரும் கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீட்டில் இருந்து விதிவிலக்கு அளிக்கவும் ஜெ அரசு முன்வந்தது.

 

  •  கடந்த ஆறு ஆண்டுகளாக ஹிந்துக்கள் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் தமிழகத்தில் நடத்தப்பட்டனர். 2011ல் ஜெ பதவி ஏற்ற நாள் முதல் எந்த ஹிந்து இயக்கத்தின் பொதுக் கூட்டத்திற்கும் தமிழகத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் ஹிந்துக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல்தான் இருந்தது. நீதிமன்றமே அனுமதித்த நிகழ்ச்சிகளுக்கும் காவல்துறை மூலம் பல்வேறு முட்டுக்கட்டைகள் கொடுத்து வந்தது ஜெ அரசு.

 

  • ஹிந்துக்களின் பண்டிகையான தீபாவளி, பொங்கல் நாட்களில் டாஸ்மாக்கிற்கு இலக்கு நிர்ணயம் செய்து ஹிந்துக்களை குடிகாரர்கள் ஆக்கிய அரசு.

 

  • கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேலக்கோட்டையில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பல ஐயங்கார்கள் குடியேறினர். அப்படிப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெயலலிதா. மாண்டியாவின் 800 ஐயங்கார் குடும்பங்களை ஒரு தீபாவளியின் போது கொன்று குவித்த மதவெறியன் திப்பு சுல்தான். தன் நேரடி முன்னோர்களை கொன்று குவித்த திப்பு சுல்தானுக்கு எப்படியாவது தமிழகத்தில் மணி மண்டபம் எழுப்பி இஸ்லாமிய மதவெறியாளர்களை சமரசம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் ஜெயலலிதா காட்டிய ஆர்வம் அலாதி.

 

  • ஆக, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஹிந்து விரோத மறுபக்கம் ஒன்று உண்டு என்பதை நாம் மறந்துவிட வேண்டாம். காரணம், வரும் காலம் இன்னமும் நெருக்கடி நிறைந்ததாக இருக்கலாம்.