சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் இயங்கி வரும் ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில், விடுதி காப்பாளினியாகப் பணியாற்றி வரும் லட்சுமியிடம், விடுதி மாணவிகளை மதமாற்றத்திற்குக் கட்டாயப்படுத்துவதாகவும், மறுப்பவர்களை வன்கொடுமை செய்வதாகவும், குளியலறை மற்றும் கழிவறை பயன்பாட்டில் மாணவிகளுக்குப் பாரபட்சம் காட்டுவதாகவும், உணவுப்பொருட்களில் ஊழல் செய்வதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அவ்விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவியின் பெற்றோரே, இதுகுறித்த புகார் கடிதத்தினைத் தமிழக முதல்வர் உட்பட சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பியுள்ளார்.
தஞ்சாவூரில் மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளி விடுதியில், பிளஸ் 2 பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன், தன்னை விடுதி வார்டன் சகாய மேரி தன்னை மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும், மதம் மாற மறுத்ததால், தன்னை துன்புறுத்தியதாகவும் கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. இதற்குரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மாணவி தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி உலா வந்தது. தமிழக அரசு மாணவர்கள் தங்கியுள்ள விடுதிகளை `சமூக நீதி விடுதி’ என பெயர் மாற்றம் செய்து, மறைமுகமாக மத மாற்றம் நிகழ்வுக்கு ஆதரவு கொடுக்கிறது என்ற சந்தேகத்தை சிலர் எழுப்புகின்றனர். அரசின் `சமூகநீதி விடுதி’களில் தங்கியுள்ள மாணவர்களுக்குப் பெரும்பாலும் விடுதிக்குள்ளேயே சாதியக் கொடுமைகளும், மதரீதியான அடக்குமுறைகளும் நடக்கின்றனவே, இதுதான் திமுகவின் சமூகநீதியா?
தென்னிந்தியாவில் உள்ள பல கிறிஸ்தவ கான்வென்ட் பள்ளிகள் ஹிந்து மாணவர்களை பைபிளைக் கற்க கட்டாயப்படுத்துகின்றன. பள்ளிகளில் சேருவதற்கான நிபந்தனைகளில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. ஆளும் திமுகவினரின் ஆசியுடன் மத மாற்ற நிகழ்வு நடக்கிறது என சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். நடுநிலையாக இருக்க வேண்டிய சபாநாயகர் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவான பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொள்கிறார்.
மதமாற்றத்திற்கு துணையாக என்ஜிஓக்களும் செயல்படுகின்றன. Jesus Redeems Ministries (Tamil Nadu) என்ற என்ஜிஓ மத மாற்ற நடவடிக்கைகள் தொடர்பாக “Legal Rights Protection Forum” (LRPF) என்ற அமைப்பு புகார் எழுப்பி உள்ளது. அதன் கீழ் உள்ள “New Life Society” என்ற துணை அமைப்பு கூட, அதே அலுவலக முகவரி மற்றும் ஒரே தலைமை நிர்வாகிகள் இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவும், அவர்களின் FCRA (Foreign Contribution Regulation Act) பதிவு உட்பட பல நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு உட்பட்டதால் மத்திய அரசு தடைவிதித்துள்ளது.
Caruna Bal Vikas (சென்னை சார்ந்த NGO) இந்த அமைப்பு மீது மத மாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாக CBI (Central Bureau of Investigation) வழக்கு பதிவு செய்துள்ளது. Compassion International (USA) மூலம் வழங்கப்பட்ட நிதிகளை மத மாற்றத்துக்காக பயன்படுத்தியதாகவும், “poor children into fulfilled Christian adults” என்று குறிக்கப்பட்ட நீண்ட-கால நோக்கம் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏழைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவுவதாக கூறிக்கொண்டு மதமாற்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.