‘சத்யமேவ ஜெயதே’; மதன்மோகன் மாளவியா

ஆசிரியராக தன் வாழ்வை துவங்கிய மதன்மோகன் மாளவியா ஆசியாவின் மாபெரும் பல்கலைக் கழகமான பனாரஸ் பல்கலைக் கழகத்தை நிறுவினார். அகில பாரதிய ஹிந்துமகாசபாவின் தலைவராகவும் இருந்துள்ளார். ஒருமுறை ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவர் காசி பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஷாகாவிற்கு சென்றார். அதற்கு முன் அந்த பல்கலைக் கழகத்தை ஸ்தாபித்தவரும், சுதந்திர போராட்ட வீரருமான பண்டிட் மதன்மோகன் மாளவியாவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். டாக்டரின் வருகையை அறிந்து அவரை மாளவியா அன்புடன் வரவேற்றார். இருவருக்கும் மத்தியில் நீண்ட நேரம் மனம் திறந்த உரையாடல் நடைபெற்றது. டாக்டர்ஜி மூலம் ஹிந்து ராஷ்ட்ரத்தின் மறுமலர்ச்சிக்காக துவக்கப்பட்டுள்ள அசாதாரண முயற்சிகள் காரணமாக தேசத்தலைவர்கள் மத்தியில் அவருக்கு அளவிட முடியாத மதிப்பு உருவாகியிருந்தது. மதன்மோகன் மாளவியாவின் செயல்பாடுகளும் இதனை உணர்த்தியது.
மதன்மோகன் மாளவியாவை ரவீந்திரநாத் தாகூர் அவருக்கு மேன்மைமிகு என பொருள் படும் ‘மஹா மானா’  என்று அழைத்தார். மகாத்மா காந்தி ‘பிரதா ஸ்மாரான்யா’, ‘தேவதா புருஷ்’ என அவரை புகழ்ந்தார். மக்கள் அவரை ‘தர்மாத்மா’, கர்மயோகின்’, ‘ஏழைகளின் அரசன்’ என்று அழைத்தனர்.

முண்டக உபநிஷத்தில் உள்ள ‘சத்யமேவ ஜெயதே’ என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியவர் இவர். ‘இந்திய பொருட்களையே வாங்குவோம்’ என்ற கோஷத்தை முன்னெடுத்தவர் மாளவியாதான். காங்கிரஸ் கட்சியின் தலைவராக நான்கு முறை பதவி வகித்தவர்.

மதன்மோகன் மாளவியாவின் நினைவு.