கோவா தேர்தல் முடிவு. மக்கள் யாரு பக்கம்

நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு மாநில  உள்ளாட்சி தேர்தல்களில் பாரதீய ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. . ஏற்கனவே  மாநில சட்டசபைக்கு நடைபெற்ற இடைதேர்தல்களிலும் பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல்களிலும் மிகப்பெரிய வெற்றியை ஈட்டிவருகிறது. இந்த நிலையில் நேற்று  வெளியான கோவா மாநில ஜில்லா பரிசத்  தேர்தலின் முடிவுகளும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கே சாதகமாக அமைந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்கது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜில்லா பரிஷத் தேர்தலில் 25 உறுபினர்களை கொண்ட வடக்கு கோவாவில் 19 இடங்களை பெற்று மிகப்பெரிய வெற்றியையும் தெற்கு கோவாவில் 24 இடங்களுக்கு 15 இடங்களை பெற்று முழு மெஜாரிட்டியுடன் நிர்வாகத்தை கைப்பற்றியுள்ளது. எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி  இரண்டு மாவட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக 4 இடங்களிலும் மகாராஷ்டிரா கோமந்த வாத கட்சி 5 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் சுயேட்சைகள் 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். முன்னால் முதல்வர் மனோகர் பரிக்கரின் மறைவுக்கு பின்னர் முதல்வர் பொறுப்புக்கு வந்துள்ள முதல்வர் ப்ரோமோத் சாவந்த்க்கு மக்கள் அளித்துள்ள  மிகப்பெரிய  நம்பிக்கையை ஆகும். கொரோனா பொது முடக்கத்தின் போது ஆற்றிய மக்கள் பணிக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆதரவு  என்றால் மிகையல்ல . மேலும் எதிர்வரும் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டமன்ற தேர்தலுக்கும் எது ஆச்சாரமாக அமையும் என்பது அரசியல் நோக்கர்களின் கணிப்பாக உள்ளது.