கோயில்களின் சடங்குகளில் நிர்வாகம் தலையிட முடியாது

கேரள மாநிலம் வெள்ளையணி பத்ரகாளி தேவி கோயிலில் காளியூட்டு விழா நடத்த தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட ரிட் மனுக்களை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், திருவிழாவை நடத்துவது குறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு தான் உரிமை உண்டு என்றும் அந்த கோயிலின் ஆகம விதிகள், வழக்கம், சடங்குகள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப விழா நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், ஒரு கோயிலுக்கு அரசியல் ரீதியாக பொதுவான வண்ண அலங்கார பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று எந்த மாவட்ட நிர்வாகமோ அல்லது காவல்துறையோ வலியுறுத்த முடியாது. அதேபோல், திருவிழாக்களுக்கு காவி நிற அலங்காரப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்த எந்த பக்தருக்கும் சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும், அது ஏற்பாட்டாளர்களின் முடிவு என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. கோயில் வளாகத்திலோ அல்லது கோயிலின் சுற்றுவட்டாரத்திலோ சட்டம் ஒழுங்கு மற்றும் விழாவை சுமூகமாக நடத்துவதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்ததாக சந்தேகம் எழுந்தால், திருவிதாங்கூர் தேவசம்போர்டு இந்த விவகாரத்தை காவல்துறை அதிகாரிகளிடம் கொண்டு செல்ல வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. கம்யூனிஸ்டுகள் ஆளும் கேரளாவில், ஹிந்து கோயில்களை குறிவைத்து நடத்தப்படும் சம்பவங்களில் ஒன்றாக, திருவனந்தபுரத்தின் தெற்குப் புறநகரில் அமைந்துள்ள வெள்ளையணி பத்ரகாளி கோயிலில் காளியூட்டு திருவிழாவின் போது காவி துணிகளால் அலங்காரம் செய்யக்கூடாது, காவி நிற பந்தங்கள், கொடிகள் மற்றும் பிற துணிகளைத் தவிர்க்க வேண்டும் எனறு கோயில் அதிகாரிகளை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் வலியுறுத்தியது. ஆனால், கோயில் நிர்வாகம் காவி துணை அலங்காரத்தை அகற்ற மறுத்துவிட்டது. கேரள இடதுசாரி அரசின் ஹிந்து மதவிரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கோயில் விழாவுக்கு வந்திருந்த ஹிந்துக்கள் காவி துணியை அணிந்திருந்தனர். குறிப்பாக, ஹிந்துப் பெண்கள் பாரம்பரிய புடவையுடன் காவி நிற ரவிக்கை மற்றும் காவி நிற துப்பட்டாவுடன் விழாவில் கலந்துகொண்டனர். மேலும் விழாவின்போதுகோயில் முன்பாக பாதுகாப்புக்காக அமைக்கப்படும் காவல் நிலைய சோதனைசாவடியை காவி துணியைப் பயன்படுத்தி பக்தர்கள் அமைத்தனர்.