கொங்குப் பெண் கொதித்தெழுந்தால்?

ஒருபுறம்,  பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் மீதான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை, ஊடகத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள முற்போக்குவாதிகள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், அதாவது, கொங்கு மண்டலத்தில், இந்த நாவலின் கருத்துகளால் மனம் புண்பட்ட கொங்கு வேளாளச் சமுதாயத்தைப்  வெந்த புண்ணில் வேலைப் பாச்சுவதாக அமைந்திருக்கிறது இந்தத் தீர்ப்பு.kongu-womens

கொங்கு வேளாளர் சமூகத்தினரின் பெரும் எதிர்ப்பைப் பெற்றிருந்தது இந்த நாவல். சென்னை நீதிமன்றம் தனது விரிவான, ஆழமான உரையில் இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வாறு முற்போக்கானது என்றும், அது உறுதியளிக்கும் சுதந்திரம் எத்தகையது என்றும் குறிப்பிட்டுள்ளது. தேசத்தின் அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்ட இயங்குசூழலின் பின்னணியில், பெருமாள் முருகன் வழக்கின் தீர்ப்பானது அந்தச் சமுதாயத்தின் உணர்வுகளைக் கருத்தில் கொள்ளாமல்,   ‘கருத்துச் சுதந்திரம்’ என்கிற கோணத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்பதுதான் விமர்சனத்துக்கு இடமளிக்கிறது.

பெருமாள் முருகன் செதிருப்பது போன்று ஒரு சமுதாயத்தின் ஒட்டுமொத்தப் பெண்களும் ஒழுக்கமில்லாதவர்களாக சிறுமைப்படுத்தப்படுவதை ஒருவரது அரசமைப்புச் சட்ட உரிமை, கருத்து சுதந்திரம் என்று எப்படிச் சோல்லிவிட முடியும்?

எந்தவொரு நாகரிக சமூகத்திலும் பெண்களின் கண்ணியம் மிக உயர்ந்ததாகக் கருதப்படும் நிலையில், பெண்கள் குறித்த அத்தகைய கண்ணியமற்ற குற்றச்சாட்டு, கருத்துச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கிறதா? கொங்கு வேளாளர் சமுதாயப் பெண்களை விடுங்கள், வேறு எந்த ஜாதியை, மதத்தைச் சேர்ந்த பெண்களாக இருந்தாலும், இப்படி ஒட்டுமொத்த பெண்களையும் சிறுமைப்படுத்தும் பதிவை, அது புனைவாகவே இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்களா?

ஒரு படித்த பெண்மணி; திருச்செங்கோட்டில் தொழில் புரிபவர்; வைகாசி விசாக சடங்கு (வரடிக்கல் சுற்றுதல்) விரதத்தில் குழந்தை பெற்றுக் கொண்டவர். அவர் என்னிடம் கேட்டார்: முருகனின் புத்தகத்தைப் படித்தவர்கள், என்னையும் என் குழந்தையைப் பற்றியும் என்ன நினைப்பார்கள்? அவரது கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. பெருமாள் முருகனின் புத்தகத்தைக் கொண்டாடும் முற்போக்குவாதிகளிடமும் பதில் இருக்காது.

திருச்செங்கோட்டில் வாழும் ஆயிரக் கணக்கான பெண்கள் இந்த அவமானத்தில் துன்புறுகிறார்கள் – மௌனமாக! அவர்களது வலியை உணர்கிறேன். ஒரு வினாடி யோசித்துப் பார்த்தால், நீங்களும் உணர்வீர்கள்.

பாடம் இதுதான்: ஆட்சேபனைக்குரிய கருத்து வெளிப்பாட்டை தடை செய அல்லது அனுமதிக்க, ஒரு நடுநிலையான,  சீரான அரசியலமைப்பு அணுகுமுறை தேவையாக இருக்கிறது. மாறாக,  வல்லான் வகுத்ததே சட்டம்,  வன்முறைவாதிகளுக்கே வாழ்வு என்று சோன்னால், அது எங்கே போ முடியும்

(நன்றி: தினமணி)