மதுரை கேசவ சேவா கேந்திரம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு ஆகியவை சார்பாக, மதுரை சுற்று வட்டாரத்தில் இருக்கும் 50 மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பயன்பெறும் வகையில், அந்த மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவு இயந்திரங்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, கேசவ சேவா கேந்திர தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். சேவா பாரதி மாவட்டச் செயலாளர் சிவபாலன், பிராந்த்த சம்பர்க ப்ரமுக் ஶ்ரீனிவாசன், மதுரை ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு பொறுப்பாளர் விஸ்வநாதன், மதுரை ஆர்.எஸ்.எஸ். மருத்துவர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராம்பிரசாத் ஆகியோரும் மதுரை சார்ந்த மருத்துவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.