டாக்டர் பாலகிருஷ்ண முன்ஜே ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். திலகரின் ஆத்மார்த்த சீடர். ஹிந்துத்துவத்தில் தீவிர பக்தி உடையவர். அவரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டது. அதற்காக ஒரு விழாக்குழு அமைக்கப்பட்டது. நிதி திரட்ட ஏழு பேர் கொண்ட குழு கையெழுத்திட்டு வேண்டுகோள் விடுப்பது என முடிவாகியது. அந்த ஏழு பேரில் ராஜாஜியும் ஒருவர்.
சென்னை ஆர்.எஸ்.எஸ் தலைவர் இது விஷயமாக ராஜாஜியிடம் ஒப்புதலைப் பெற நேரில் சந்தித்துப் பேசினார். இதுபோன்ற விஷயங்களில் தான் கலந்து கொள்வதில்லை என்று சொல்லி மறுத்துவிட்டார் ராஜாஜி. உடனே அவரிடம் சென்னை தலைவர், ஸ்ரீ குருஜி எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். அதைப் படித்துப் பார்த்த ராஜாஜி, ஓ! கோல்வல்கர் (குருஜி) இக்குழுவில் இடம் பெற்றுள்ளாரா? அப்படியானால் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை. அவர் இருந்தால் நிதி நேர்மையாக செலவிடப்படும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்று சொல்லி அந்த வேண்டுகோளில் கையெழுத்திட்டார்.
ஆர்.எஸ்.எஸ் இரண்டாவது தலைவராக இருந்த ஸ்ரீ குருஜி கோல்வல்கர் ஒரு பெரிய தபஸ்வி. அவரது சொல்லுக்கு ஒரு பெரிய சக்தி இருந்தது.
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்.
அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்