கும்பகோணமும் மகாமகமும்

மகாமகம்

பிப்ரவரி 22, 2016

 

ங்கை முதலிய 9 புண்ணிய நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமக குளத்தில் உள்ள கிணறுகள் மூலம் எழுந்தருளுகின்றன. அன்று மகாமக குளத்தில் நீராடுபவர்களுக்கு, நாட்டில் உள்ள அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்கும். இது கும்பகோணம் தல புராணம் மகாமகம் பற்றி page-16_pic_1கூறும் செய்தி.

‘திருக்குடமூக்கு’ என்பது இந்த ஊரின் தேவாரப் பெயர். விஜயநகர மன்னர்கள் காலத்தில் ‘கும்பகோணம்’ என்று அறியப்பட்டது. திருக்குடந்தை என்பதும் மற்றொரு பெயர். 14 நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த சம்பந்தரும் அப்பரும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளதிலிருந்து இதன் புராதனம் தெரியவரும்.

தல வரலாறு

பிரம்மா, சர்வேஸ்வரனை பிரளய காலத்தில் வெள்ளப் பெருக்கில் உலகம் மூழ்கி அழியும் போது மீண்டும் உயிர்கள் தோன்ற என்ன வழி?” என்று கேட்டார். ஈசனின் அறிவுரை ஏற்று, பிரம்மா அமிர்தத்தை மண்ணில் குழைத்து ஒரு கும்பம் (குடம்) செய்து, அதனுள் அனைத்து சிருஷ்டி பீஜங்களையும் வைத்து, அமிர்தத்தால் நிரப்பி மேருமலையில் ஒரு உறியில் வைத்து பூஜித்து வந்தார்.

மஹா பிரளயம் வந்தது. பெரும் வெள்ளத்தில் உறியுடன் கலசம் மிதந்து சென்று, பூமியில் ஓரிடத்தில் நிலைபெற்றது. பிரம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈஸ்வரன் வேடன் உருவத்தில் அங்கு வந்து அம்பு எய்தார். கும்பத்திலிருந்து (குடத்திலிருந்து) அமுதம் வழிந்தோடியது. வேடன் உருவில் வந்த சிவபெருமான், உடைந்த கும்பத்து ஓடுகளையும் சிந்திய அமிர்தத்தையும் சேர்த்து, சிவலிங்கத்தை ஸ்தாபித்து லிங்கத்துடன் ஐக்கியமானார். கும்பத்திலிருந்து தோன்றிய பெருமான் ‘கும்பேஸ்வரர்’ என்ற பெயருடன் அங்கே நிலைக்கிறார். பிரதான கோயிலாpage-17_pic_2  ன கும்பேஸ்வரர் கோயிலில் இறைவனுக்கு அமுதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. இறைவியின் பெயர் ‘மந்திர பீடேசுவரி’, ‘மங்களாம்பிகை’.

அமிர்தம் வழிந்தோடி தங்கிய இடம்தான் இன்றைய மகாமகக் குளமும் பொற்றாமரைக் குளமும் அமிர்தப் பெருக்கால் மீண்டும் உயிர்கள் தோன்றி பூமி செழித்தது.

இந்த மகாமகக் குளம் 12 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நல்ல படிக்கட்டுகள் கொண்ட பெரிய குளத்தின் மத்தியில் 9 கிணறுகள் உள்ளன. சுற்றி நான்கு கரைகளிலும் பதினாறு சந்நிதிகள் உள்ளன.

ஜோதிட அறிவியல்

ஜோதிட சாஸ்திரப்படி, குரு சிம்ம ராசியில் கூடி சிம்ம ராசிக்கு அதிபதியான சூரியன் தன் மகன் சனி வீட்டுள், ஏழாமிடமாகிய கும்ப ராசியில் நின்று பௌர்ணமி கூடிய மக நட்சத்திரத்தில் சந்திரன், குருவுடன் சேர, குருவும் சந்திரனும் சூரியனையும் குரு, சந்திரன் இருவரையும் சூரியன் முழுப்பார்வை பார்க்கும் நாளே மகாமக தினம் எனப்படுகிறது. அது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றது. வருகின்ற 2016 பிப்ரவரி 22ம் தேதி (அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அந்த அரிய நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. சூரியன், பூமி, சந்திரன், குரு கிரகம், மக நட்சத்திரம் ஆகிய ஐந்தும் நேர்க்கோட்டில் வரும் காலம். இந்தக் காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் page-17_pic_1குரு கிரகம் முழுநிலவுபோல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும். அன்று பகல் 11:18 மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்குள் மகாமக குளத்திற்கு வருகை தந்து அருள்மிகு ஆதிகும்பேஸ்வரர் புனித நீராடி, பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்.

சுமார் 35க்கும் மேற்பட்ட பல பெரிய, புராதன கோயில்களைக் கொண்டுள்ள இத்தலம் நவக்கிரஹ ஸ்தலங்களுக்கு மையமாக அமைந்துள்ளது.

வடபாரதத்தில் நடக்கும் கும்பமேளாவைப் போல, தெற்கே கும்பகோணத்தில் பல லட்சம் மக்கள் கூடி மகாமகக் குளத்தில் ஸ்நானம் செய்து பயன் அடைகின்றனர். இந்த மாபெரும் புனித நிகழ்ச்சியில் சுமார் 20 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைவரும் மகாமகத்தன்று குடந்தையில் புனித நீராடி இறையருள் பெறுவோமாக!