குஜராத் கோத்ரா ரயிலேறிப்பு சம்பவமும் பின்னர் நடந்த கட்டுக்கதையும்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத் மாநிலம் சபர்மதிக்கு பயணம் மேற்கொண்ட ராமகரசேவகர்கள் 57 பேர் சபர்மதி  எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளில் பெட்ரோல் ஊற்றி  கோத்ரா என்ற இடத்தில் உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாதிகளால்  எரித்து கொல்லப்பட்டனர், இதனால் வெகுண்டெழுந்த குஜராத் பொதுமக்கள் சிறுபான்மையான இஸ்லாமியர்கள் மீது வெகுண்டெழுந்து தாக்க தொடங்கினர். ஏற்கெனவே ஒருவருக்கொருவர் ஏற்படுத்திக்கொண்ட உள்ளூர் பகைக்கு இந்த கலவரம் இரு  மருங்கிலும்  உள்ளுர்வாசிகளோடு பெருங்கூட்டமாக ரௌடிகளும், கிடைக்கும் சந்தர்ப்பத்தை வைத்து புகுந்து விளையாடும்  கும்பல்களும் இணைந்ததன் விளைவு பெருங்கலவரமானது.
தொடர்ந்து மூன்று  நாட்கள் நடந்த கலவரத்தில் இஷ்டப்படி அடி, வெட்டு ,குத்து ,மானபங்கம் என மாநிலம் முழுவதும்  பெரும்பான்மையான பகுதிகளில் அவரவர் ராஜ்யம் நடந்தது .விளைவு அரசின்  கணக்குப்படி 790 இஸ்லாமியர்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டனர் ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்று அரசின் ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்றனர் . ஆயிரக்கணக்கான  தங்கள் சொந்த ஊருக்குள்  போக முடியாமல் அகதிகளாக நிவாரண முகாம்களில் வாழ்ந்தனர்.
எல்லாவற்றிக்கும் காரணமாக இருந்தது கோத்ரா நகரின் முக்கிய காங்கிரஸ் பிரமுகரும் சிறுபான்மை அமைப்பின் தலைவருமானான ஹாஜி பில்லா, ரஜாக் குர்குர் தலைமையிலான குழுவினரே முக்கிய குற்றவாளிகள்.  உள்ளூர் இளைஞர்களை திரட்டி இந்த சதி செயலில் ஈடுபட்டனர்   நீதிமன்ற விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவில் 20 பேருக்கு மரண தண்டனையும் 40 பேருக்கு  ஆயுள் தண்டனையும் 64 பேரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை என விடுதலையாயினர். பின்னர் இந்த வழக்கு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி நானாவதி தலைமையிலான விசாரணை கமிஷன் இந்த கலவரத்தின் ஆரம்ப புள்ளி இதுவே இது திட்டமிடப்பட்ட சதிச்செயல் என்று அறிக்கை அளித்தது.
இதற்கிடையே  அப்போதைய ரயில்வே அமைச்சர் லாலு ஒரு கமிஷனை அமைத்து இது திட்டமிடப்பட்டதல்ல தற்செயலானது என்று மதசார்பற்ற தன்மைக்கு ஆதரவாக ஒரு அறிக்கை என்ற கூத்தை நடத்தி காட்டினார். அது பின்னாளில் கோர்ட் மூலம் நிராகரிக்கப்பட்டது . ஏற்கெனவே மாநில அரசு ஒரு கமிஷனை ஏற்படுத்தி விசாரணை செய்து கொண்டிருக்கும் போது அதனை சீர்குலைக்கும் நோக்கில் இன்னொரு கமிசன் ஏற்படுத்துவது தவறானது அது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியது.
பின்னர் நடந்த மேல் முறையீட்டில் அனைவரது தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 2002 ம் ஆண்டு நடந்த கலவரத்துக்கு இப்போது என்ன வந்தது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. கலவரத்தில் பாதிக்கப்பட்டவராக   ஒரு முஸ்லீம்   குத்புதீன் அன்சாரி என்பவரையும் கலவரம் செய்ததாக ஆவேசமாக கையில் கத்தியுடன் பயங்கரமாக  வந்தவர் அசோக் பரமர்  இருவரின் படங்களையும் அன்றய பத்திரிகைகளில் பிரசுரித்து கலவரம் எவ்வளவு தீவீரமாக இருக்கிறது என்று செய்தி வெளியிட்டது ஆங்கில  ஊடகங்கள். தற்போது இருவரும்  நண்பர்கள். அவர்களில் ஒருவரான அசோக் பரமர் தனது செருப்பு கடையை துவக்கி வைக்க குத்புதீன் அன்சாரியை அழைத்துள்ளார். அவரும் வந்து பார்மரின் கடையை திறந்து வைத்துள்ளார் அசோக் பரமர் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி குத்புதீன் ஒரு கடைக்காரர். இவர்கள் இருவரையும் ஆங்கில ஊடகத்தின் பெண்  அதுமாதிரி போஸ் கொடுக்க சொன்னதாகவும் அதனால் அதுமாதிரி செய்ததாகவும்  பின்னர் நடந்த  வழக்கில் ஆதாரம் இல்லாததால் தான்  விடுதலை ஆனதாகவும் சொல்லுகிறார் . அசோக்  பர்மன்.
குத்புதீனை தலையில் தூக்கிக்கொண்டு மதச்சார்பின்மையை காக்க பிறந்த கம்யூனிஸ்ட்கள்  அவரை மேற்கு வங்கத்துக்கு அழைத்து சென்று தொழில் செய்ய உதவினார் ஆனாலும்  அங்கு அவரால் ஒருசில மாதங்களே தாக்கு பிடிக்க முடிந்தது. பின்னர் சொந்த மாநிலமான குஜராத்துக்கே திரும்பினார் . பின்னர் தனது சொந்த ஊரிலேயே தொழிலை தொடருகிறார் . இதில்  என்ன வென்றால் சம்மந்தமே இல்லாமல் ஒருசிலரை படமெடுத்து நடக்ககாததை நடந்ததாக சொல்லி பொய்யை உருவாக்கி   அதையே தூக்கி  கொண்டு பிரச்சாரம் செய்து வந்த ஆங்கில ஊடகத்தின் லட்சணம் என்ன என்பது இருபது ஆண்டுகள் கழித்து தெரிய வருகிறது. அதற்குள் இந்த பொய் உலகம் முழுவதும் உண்மை என  ஆகி விட்டது. பரபரப்பான செய்தி தரவேண்டும் என்பதற்காக நியாயம் தர்மம் எதையும் பற்றி  கவலை படாமல் தனது இஷ்டத்திற்கு செயல்படும் சில ஊடகவியலாளர்களின் உண்மை   முகம் வெளிப்பட்டுள்ளது. பொய் செய்தி தந்த அந்த அயோக்கியன் எந்த சலனமும் இன்றி தனது அயோக்கியத்தனத்தை தொடருவான் என்பதும் தனது சகாக்களால்  ஹீரோ போன்று பேசப்படுவான் என்பதுதான் உண்மை. இதையே சாட்சியாய்  வைத்து கொண்டு மார்சிஸ்ட்டு, மதசார்பற்ற பேர்வழிகள் அந்த இருவரையும்  கருத்தரங்கு   கவியரங்கு என்று ஊர் ஊராய் அழைத்து சென்று பொய்ப்பிரசாரம் செய்துள்ளனர். இவர்களின் ஏஜென்ட்டாக செயல்படும் அந்த மூளையை இவர்களுக்கு  தந்த கயவர்களால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட நாடகம் 20 ஆண்டுகளுக்கு பின்னர் உண்மை வெளிசத்துக்கு வந்துள்ளது.

One thought on “குஜராத் கோத்ரா ரயிலேறிப்பு சம்பவமும் பின்னர் நடந்த கட்டுக்கதையும்

  1. எவ்வளவு பொய்களை கட்டு கட்டாக அடுக்கி பரப்பியிருக்கிறார்கள்……

Comments are closed.