கீதையில் உங்களுக்குப் பிடித்த வரிகள்?:-பரதன் பதில்கள்

எனக்கு அடுத்த மாதம் 60 வயது பூர்த்தியாகிறது. அதை எப்படி கொண்டாடுவது?

– ஆர். விஸ்வநாதன், சீர்காழி

 

திருக்கடையூர் சென்று வாருங்கள். மார்க்கண்டேயனை எமனிடமிருந்து காப்பாற்றிய சிவ ஸ்தலம். அபிராமி அந்தாதி அரங்கேற்றம் நடந்த திருத்தலம். அங்கு 60,70,80, பூர்த்தியானவர்கள் ஹோமம் செய்வது சிறப்பானது. அங்கு போய்வர வசதி இல்லை எனில் உள்ளூரில் ஏதாவது கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து 10 ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.

 

* ‘கீதையில்  உங்களுக்குப் பிடித்த  வரிகள்?  

– கே. சதாசிவம், வந்தவாசி

 

பரதனாருக்கு சமஸ்கிருதம் தெரியாது. அதனால் கீதையில் புலமை இல்லை. ஒரே ஒரு சுலோகத்தின் பொருள் மட்டும் மனப்பாடமாகப் பதிவாகியுள்ளது. அது, சிறுமை என்ற கேட்டினால் நல் இயல்பை இழந்த நான் அறநெறியை அறியப் பெறாது மயங்கி உம்மை வினவுகிறேன். எமக்கு சிறப்பீனுவதை இயம்பும். நான் உமது சிஷ்யன். தஞ்சமடைகிறேன். உபதேசித்தருளும்.

 

பிரம்ம முகூர்த்தத்தில்தியானம், ஜபம் செய்வது மிகவும் விசேஷம் என்கிறார்களேபிரம்ம  முகூர்த்தம்  எப்போது?

– ஏ. சந்திரசேகரன், ஆதியூர்

 

அதிகாலை நான்கு மணி முதல் ஐந்தரை மணி வரை உள்ள காலம் பிரம்ம முகூர்த்தம் எனப்படும்.

 

லஞ்சம், ஊழல்கலப்படம்ஏமாற்று  என  தவறான  வழிகளில்  சம்பாதிக்கிறவர்கள்  கூட சௌகரியமாக  இருக்கிறார்களே?

– எஸ். ராம்குமார், திண்டுக்கல்

 

சௌகரியமாய் இருக்கிறார்கள் என்று எதை அளவுகோலாக வைத்துச் சொல்கிறீர்கள்? சொத்தும் காரும், பங்களாவும் இருப்பதால் மட்டுமே ஒருவரை சௌகரியமாக இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? அவர்களை நெருங்கிப் பார்த்தால் மனதில் அமைதி இல்லாமல், பயத்தோடு, தூக்கமும் இல்லாமல் நிம்மதியற்று இருப்பார்கள் என்பதைக் காணலாம்.

 

நான் வெற்றி பெற்றால் ஆர்.கே. நகர் தொகுதியில் 52,000 வீடுகள் கட்டித்தரப்படும் என்கிறாரே தினகரன்?

– க. ரவின்குமார், திருச்செங்கோடு

ஏமாற்றாதே… ஏமாற்றாதே… ஏமாறாதே… ஏமாறாதே… ஒரு வீடு கட்ட குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாய் செலவாகும் என்றாலும் கூட 52,000 வீடுகளுக்கு ஆயிரத்து நாற்பது கோடி ரூபாய் தேவை. அதுசரி… ஆர்.கே நகருக்கு மட்டும் செய்து கொடுத்தால் மற்ற தொகுதி வாக்காளர்கள் இளிச்சவாயர்களா….

 

* டெல்லியில் விவசாயிகளுக்காகப் போராடும் அய்யாக்கண்ணு பற்றி?  

– ப. வேல்முருகன், திருச்சி

ஊடகங்களில் தனது பெயர் பிரபலமாவதற்காக கோமாளித்தனமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். ஜல்லிக்கட்டு, நெடுவாஸல், தங்கச்சிமடம் போராட்டங்கள் ஓய்ந்த பிறகு மோடிக்கு எதிராக ஏதாவது போராட்டம் வராதா என்று காத்திருக்கிறவர்களுக்கு அடுத்து நேரம் போக நல்ல வாய்ப்பு.

 

புதியதாக பிறந்துள்ள புத்தாண்டானஹேவிளம்பிஎவ்வாறு அமையும்?

– ரா. திருப்பதி, மேட்டுப்பாளையம்

 

இதை ‘ஹேமலம்ப’ என்றும் அழைப்பதுண்டு. அதற்கு ‘படரும் தங்க கொடி’ என்று பொருள். மத்திய அரசு வலுப்பெறும். ராணுவ பலம் அதிகரிக்கும். எல்லையில் எதிரிகள் அடக்கப்படுவார்கள். மத்திய அரசின் புது முயற்சியால் இனி இளைஞர்கள் சம்பாதிக்க வெளிநாடு செல்ல வேண்டாம். அதற்கான வாய்ப்புகள் நம்ம நாட்டிலேயே அமையும். மகளிர் சக்தி ஓங்கும் – தங்கம் விலை குறையும் – இது நமக்குத் தெரிந்த ஜோதிடர் ஒருவரின் கணிப்பு.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.