கிராம கைவினைஞருக்கு கிடைக்கிறது வேலைவாய்ப்பு

வயல், ஏரி, குளம், நதி, சமுத்திரம் என்று எந்த ஒரு இடத்தையும் விட்டுவைக்காமல் வியாபித்துக் கொண்டிருந்தது பிளாஸ்டிக். பிளாஸ்டிக்கால் ஏற்பட்ட ஒரு விபத்து நமக்கெல்லாம் குலை நடுக்கம் ஏற்படுத்துகிறது. ஒரே ஒரு ஊரில் பிளாஸ்டிக் என்ன கொடுமை செய்தது பாருங்கள். 2005 ஜூன் 26 அன்று மும்பையில் பிளாஸ்டிக் 1,100 பேரை கொலை செய்திருக்கிறது. நகரின் வடிகால்களை எல்லாம் பிளாஸ்டிக் அடைத்துக் கொண்டு விட்டதால் பெருவெள்ளம் ஏற்பட்டு அத்தனை பேரின் உயிர் பறிபோனது.
2012 முதல் இந்தியாவில் தினசரி பிளாஸ்டிக் உற்பத்தி 26,000 டன் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 10,000 டன் பிளாஸ்டிக் கழிவு சாலைகளில், விளைநிலத்தில், நீர் நிலைகளில் வீசப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு 11 கிலோ பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. இந்த தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது.
இந்திய வணிக தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (எப்ஐசிசிஐ) 2020ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 2.2 கோடி டன் பிளாஸ்டிக் உற்பத்தி ஆகும் அளவுக்கு வளரப் போகிறது என்று சொல்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தி 2015ல் 1.34 கோடி டன்னாக இருந்தது என்பதோடு ஒப்பிட்டு பார்த்தால் இந்த விபரீத வளர்ச்சி நமக்கு புரியும். மளிகைக் கடையில் இருந்து மால்கள் வரை எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் பைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்றுவந்தார்கள்.
பிளாஸ்டிக் பாட்டில் என்ற பூதத்தை எடுத்துக் கொள்வோமே. ஆண்டு 2023க்குள் பிளாஸ்டிக் பாட்டில் சந்தை பாரதத்தில் ரூ. 40,300 கோடி அளவை எட்டப் போகிறதாம். மனிதர்களின் உடல் நலத்துக்கு கேடு. மண்ணுக்கும் தண்ணீருக்கும் கேடு, காற்றுக்கும் கேடு. அடுத்த முறை தாகத்துக்கு தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டிலை நாடுவீர்களா? மாட்டீர்களே!
அழகழகான பூ படம் போட்ட பிளாஸ்டிக் தட்டில் சுடச்சுட பொங்கல் கொதிக்கும் சாம்பார் ஊற்றி விருந்தாளியை உபசரிக்கிறீர்கள். அவர் பிழைப்பார் என்றா நினைக்கிறீர்கள்? மாட்டார். காரணம், பிளாஸ்டிக்கை சூடாக்கினால் 55 முதல் 60 கெமிக்கல்களை உமிழ்கிறது. அதெல்லாம் பொங்கலுடன் கலந்து உள்ளே போனால்…? மார்பக கான்ஸர், பெருங்குடல் கான்ஸர் வகையறாக்களை ஏற்படுத்துவது நிச்சயம் என்கிறது அமெரிக்காவின் உணவு கட்டுப்பாட்டு துறை.
பிளாஸ்டிக்கை அறவே தடைசெய்து விட்டால் எண்ணற்ற மகளிர் சுய உதவிக்
குழுக்களின் லட்சக்கணக்கான உறுப்பினர்கள்
பிழைத்துக் கொள்வார்கள். சூழலுக்கு சிநேகிதமான பண்டம் பாத்திரங்களை தங்கள் வீட்டிலிருந்தபடியே உற்பத்தி செய்து ஊரையும் வாழ வைப்பார்கள்.
மக்கும் பொருள்களாலான கைவினைப் பொருள்களுக்கு பாரதத்தில் பஞ்சமே இல்லை. அவற்றுக்கு வழிவிட்டால் வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் பிளாஸ்டிக் அஸ்தமனம் ஆகும். குஜராத்தில் இருந்து வந்த மண்பானைகளுக்கு ஹைதராபாத்தில் ஏகக் கிராக்கி. மண்பானை சமையல் சாதம் பரப்புகிற வாசனையே அலாதி. களிமண்ணாலும் மரத்தாலும் ஆன பாத்தி ரங்களை மக்களும் வாங்கத் தொடங்கினால் லட்சக்கணக்கான கைவினைஞர்களுக்கும் குலாலர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்ஸாமில் ஒரு தொழில்முனைவோர் மூங்கிலால் ஆன பாட்டில்களை சந்தைப் படுத்தி யிருக்கிறார். அந்த தயாரிப்புக்கு உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் அமோக வரவேற்பு. சணல், தேங்காய்நார், துணி, காகிதம் இவற்றால் ஆன பைகள் சுலபமாக பிளாஸ்டிக் பைகளை அடித்துத் துரத்த முடியும். சணல், நார் இவற்றின் பயன் பாட்டால் தென்னை, சணல் தோட்டப்பயிர்கள் தேசத்தில் மறுபடி பரவுவதற்கு வழி பிறக்கும். கேரளாவில் தொழிற்சங்க தலைவலி காரணமாகவே எத்தனையோ தென்னந் தோப்புகள் கைவிடப் பட்டிருக்கின்றன. அங்கே
சந்தைப் படுத்துவதற்கும் வசதி பத்தாது. ஒரிஸாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் சணல் சாகுபடி செய்துகொண்டிருந்த விவசாயிகள் அதை கைவிட வேண்டியதாயிற்று. காரணம், சணலுக்கு டிமாண்ட் சுருங்கிப்போயிற்று. மக்கும் பொருள்களான சணல் தேங்காய் நார் இவற்றாலான பைகளை பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக, பெரிய மால்களிலும் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களிலும், ஓட்டல்களிலும் வாடிக் கையாளர்களுக்கு மனமுவந்து வழங்கி மகிழலாம். அஸ்ஸாம் ஆயிரக்கணக்கான டன் கச்சா மூங்கிலை ஆஸ்திரேலியாவுக்கு ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்து வருகிறது. 10 அங்குல விட்டம் கொண்ட மூங்கில்களால் ஆஸ்திரேலியர்கள் பாத்திரங்களை உற்பத்தி செய்து கொள்கிறார்கள். உலகம் முழுவதிலும் இதுபோல மக்கும் பொருள்களால் ஆன கைவினை சந்தைகளை பாரதம் சுலபமாக ஆக்கிரமிக்கலாம்.
கைவினை பொருள்களை
யும் அலங்கார ஐட்டங
்களையும் பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்நாட்டில் பல லட்சம் வேலை வாய்ப்புகளை உரு
வாக்குவதுடன் பெரிய அளவில் வெளிச் செலாவணி
யும் சம்பாதிக்கும். மக்கள் மானியத்துக்காக அரசின் கையை நம்பி இராமல் பிழைப்புக்கு வழி தேடிக்கொள்ள முடியும் என்பதால் சுயமரியாதை என்ற பண்பு ஊட்டம் பெறுகிறது.
நேர்த்தியாக, நளினமாக வீட்டு சாதனங்களை கைவினைஞர்கள் சிருஷ்டிக்க முடியும் என்பது பாரதத்திற்கே உரிய சாதகம். வருடங்கள் உருண்டோடுகையில் அன்றாட புழக்கத்துக்கான பல பண்டம் பாத்திரங்களும் அலங்கார சாதனங்களும் கலைப்படைப்புகளாக பரிணமித்து வசீகரிக்கின்றன. ‘ஒருமுறை பயன்படுத்தி விட்டெறியும்’ பிளாஸ்டிக்கை தடை
செய்த மத்திய அரசின்
நெடுநோக்கு கோடானு
கோடி கைவினைஞர்
களின் ஏகோபித்த பாராட்டுக்கு உரியது. இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க முடியுமா என்று தடுமாறிக்கொண்டிருந்த உலகம், வியப்பால் விழிகள் விரிய பாரதத்தைப் பார்க்கிறது. பல விஷயங்களில் பாரதம் உலகத்திற்கு பாடம் நடத்துவது போல மோடியின் தலைமையில் பாரதம் ‘உலகத்தை பிளாஸ்டிக் அரக்கனின் பிடியிலிருந்து விடுவிப்பது எப்படி’
என்பதையும் விரல் பிடித்து அழைத்துச்சென்று சொல்லிக் கொடுக்கும்.