காஷ்மீர் சாரதா கோயிலில் கும்பாபிஷேகம்

காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகில் உள்ள தீத்வலில் புகழ் பெற்ற சாரதா கோயிலில் சிருங்கேரி சாராத பீட சங்கராச்சாரியார் விதுசேகர பாரதி ஸ்வாமிகள் ஜூன் 5 ஆம் தேதியன்று சாரதா தேவி விக்ரகத்திற்கு அபிஷேகம் மற்றும் ப்ரானப் பிரதிஷ்டை செய்வித்தார். பல வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் சிருங்கேரி ஸ்வாமிகள் காஷ்மீருக்கு பயணம் செய்வது இதுவே ஆகும். இந்த ஆலயம் காஷ்மீர் எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் உள்ளது. உண்மையான சாரதா தேவி ஆலயம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 கிமீ தூரத்தில் உள்ளது. புதிய ஆலய கும்பாபிஷேக வைபவத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக சிறப்பு ஹெலிகாப்டரில் சிருங்கேரி சங்கராச்சாரியர் ஸ்வாமிஜி அவர்கள் வந்து சேர்ந்தார். ஸ்வாமிஜியை மாவட்ட ஆட்சித் தலைவர் &காவல்துறை கண்காணிப்பாளர் வரவேற்றனர்.  ப்ராணப் பிரதிஷ்டை மற்றும் அபிஷேகம் செய்த பிறகு திரண்டு வந்திருந்த பக்தர்களிடை யே ஸ்வாமிஜி ஆசியுரை வழங்கினார்.

ரூபாய் 25 லட்சம் செலவில் ஆலயம் கட்டப்பட்டு இருக்கின்ற கிஷன் கங்கா நதிக்கரையில் படிக்கட்டுகள் அமைக்கப்படும் என்று குப்வாரா மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அரசு நிர்வாகம் செய்திருந்த ஏற்பாடுகளைப் பாராட்டிய ஸ்வாமிஜி பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ஶ்ரீ நகர் சென்றார். காஷ்மீரில் இத்தகையதொரு மாற்றம் நிகழ்ந்து சாரதா தேவி ஆலயத்திற்கு சங்கராச்சாரியார் சென்று வர முடியும் என்பதை கடந்த காலங்களில் கற்பனை யில் கூட நினைத்துப் பார்க்க முடியாத நிலை இருந்தது.  மோதி ஜி தலைமையில் செயல்பட்டு வரும் அரசு மேற்கொண்ட மிகத் துணிச்சலான நடவடிக்கையே இதற்குக் காரணமாகும். ஜய் சாரதா மாதா! பாரத் மாதா கி ஜய்!!