காஷ்மீரம் தந்த மதப்புரட்சியாளரின் 1000வது ஜெயந்தி; ஆச்சார்ய அபிநவ குப்தர்

காஸ்யப முனிவரின் பெயரால் உருவான காஷ்மீரம், லலிதாத்ய மன்னனால் ஆன்மிக  பூமியாக வளர்க்கப்பட்ட காஷ்மீரம், கலைகளின் தெவமான சாராதா தேவியின் இருப்பிடமா ஹிந்து புராணங்களால் கூறப்படும் காஷ்மீரம் , ஹிந்து ஞான மரபின் அனைத்து தத்துவ தரிசனங்கள் மூலமும், புத்தம், சூஃபியிஸம் போன்ற தத்துவ தரிசனங்கள் மூலமும் உலகிற்கே ஆன்மிக ஒளிபரப்பிய காஷ்மீரம் இன்று இருள் சூழ்ந்து, ஆன்மிகத்தை இழந்து, தனது அடையாளத்தையும் இழந்து வந்து கொண்டிருக்கிறது.  இவ்வேளையில்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த மண்ணில் பிறந்து உலகம் எங்கும் சைவ நெறி தழைத்தோங்க காரணமா இருந்த ஆச்சார்ய அபிநவகுப்தரின் 1000வது ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற உள்ளது.

 

பாரதநட்டின் மகுடமா விளங்கும் காஷ்மீரில் வாழ்ந்த மகான் ஆச்சார்ய அபிநவ குப்தா. உலக அளவில் உயர்ந்த ஓர் ஆன்மிகவாதி. சிறந்த படைப்பாளி. தலை சிறந்த தத்துவ ஞானி. இந்திய கலாசாரத்தில் இவர் ஏற்படுத்திய தாக்கம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நம்மை வழி நடத்தி வருகிறது என்றால் அது மிகை அல்ல. இன்று 50ற்கும் மேற்பட்ட உலக நாடுகள் இவரது படைப்புகளை ஆவு செது வருகின்றன. இதுவே அவரது பல்துறைத் திறமைக்கும் நிபுணத்துவத்திற்கும் எடுத்துக் காட்டு.

சைவ சிந்தாந்தம் மக்கள் மனங்களில் இருந்து மறைந்து விட்டதன் காரணமாக சிவபெருமானே அபிநவ குப்தாவாக, சாராதா தேவியின் சரஸ்வதி தேசமான காஷ்மீர தேசத்தில் வந்து பிறந்து, சைவத்தை மீண்டும் நிலைநாட்டினார் kashapஎன்பது வடபாரத சைவ சிந்தாந்திகளின் நம்பிக்கை. தென்கோடியில் கேரளத்தில் அவதரித்த ஆதிசங்கரர், அத்வைத கொள்கையை உலகிற்கு அளித்து, வட எல்லையில் உள்ள காஷ்மீரம் வரை பாரத தேசமெங்கும் அதனை எடுத்துச் சென்றவர் என்றால், அதே கொள்கையை காஷ்மீரத்தில் துவங்கி, இன்று தெற்கு ஆசிய நாடுகளா விளங்கும் பகுதிகள் அனைத்திற்கும் தனது சீடர்கள் மூலம் எடுத்துச் சென்றவர் ஆச்சார்யர் அபிநவகுப்தர். அஹம் பிரம்மாஸ்மி, சிவோஹம் என்ற அத்வைத கொள்கையை ஆன்மிக நெஞ்சங்களில் ஆழமாகப் பதித்தவர் இவர்.

தன் வாழ்நாளில் 250க்கும் மேற்பட்ட ஆராந்தவர். தாந்திரீக விஷயங்களையும் இவர் விட்டு வைக்கவில்லை. ஏன், தாந்திரிகம் பற்றி இந்திய மகான்களில் அதிகம் எழுதியவர் இவர்தான். இவரது தாந்திரலோக்  என்ற நூல் தாந்த்ரீக வழிபாட்டு முறைக்கு சிறந்த ஒரு கலைக்களஞ்சியம். இவர் எழுதிய மொத்த நூல்கள் 42 என்று கருதப்படுகிறது. இவற்றுள் 22 நூல்களே காப்பாற்றப்பட்டு இன்று கிடைக்கப் பெறுகிறது.

மதப் புரட்சி செய்த  மகான்களில் இவரும் ஒருவர். ஜாதி, இனம், பாலினம், மதமாச்சர்யங்கள் என அனைத்தையும் கடந்த ஒரு ஆன்மிக தத்துவத்தை நமக்குத் தந்தவர். சிவனோடு ஒன்றுபட்டவர்களுக்குள் எந்த பேதமும் இல்லை என்று உணர்த்தியவர்.

ஆன்மிக வழிபாட்டு முறைகளுக்கு அப்பால், மந்திர தந்திரங்களுக்கு அப்பால், இசையாலும் நடனத்தாலும் இறைவனை அடைய முடியும் என்று உலகிற்கு உணர்த்திய கலைஞர்களிலும் இவர் ஒருவர். நாட்டிய சாஸ்திரம் தந்த பரதமுனியின் நூல் மீதான ஓர் ஆய் saradhaவு நூல்தான் இவர் இயற்றிய அபிநவ பாரதி என்ற நூல். இசைபற்றிய இவரது நூல்கள் இன்று காணக் கிடைக்கவில்லை.

ஸ்தோத்திரங்களில் இவர் எழுதிய பைரவ ஸ்தோத்திரம் பிரசித்தி பெற்றது. தனது எழுபதாவது வயதில் 1,200 சீடர்களுடன் காஷ்மீரத்தில் ஸ்ரீநகர் – குல்மார்க் சாலையின் ஓரத்தில் இருந்த ஒரு குகைக்குள் தனது பைரவ ஸ்தோத்திரத்தை பாடிக்கொண்டே சென்ற இவரும் இவரது சீடர்களும் திரும்பி வரவே இல்லை. சிவனோடு ஐக்கியமாகி விட்டார்கள் என்பதே ஆன்மிக அன்பர்களின் நம்பிக்கை. அன்றைய நிலையில் இவருக்கு இருந்த மொத்த சீடர்களின் எண்ணிக்கை பத்தாயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய கேரளத்து நம்பூதிரிகளும் கர்நாடகத்து கூர்க்குகளும் அபிநவ குப்தரின் ஆன்மிக நெறியில் தழைத்து காஷ்மீரில் இருந்து புலம் பெயர்ந்து கேரளம், கர்நாடகம் வந்து அமர்ந்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

காஸ்யப முனிவரின் பெயரால் உருவான காஷ்மீரம், லலிதாத்ய மன்னனால் ஆன்மிக  பூமியாக வளர்க்கப்பட்ட காஷ்மீரம், கலைகளின் தெவமான சாரதா தேவியின் இருப்பிடமா ஹிந்து புராணங்களால் கூறப்படும் காஷ்மீரம் ஹிந்து ஞான மரபின் அனைத்து தத்துவ தரிசனங்கள் மூலமும் புத்தம், சூஃபியிஸம் போன்ற தத்துவ தரிசனங்கள் மூலமும் உலகிற்கே ஆன்மிக ஒளிபரப்பிய காஷ்மீரம் இன்று இருள் சூழ்ந்து, ஆன்மிகத்தை இழந்து, தனது அடையாளத்தையும் இழந்து வந்து கொண்டிருக்கிறது.  இவ்வேளையில்தான், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்த மண்ணில் பிறந்து உலகம் எங்கும் சைவ நெறி தழைத்தோங்க காரணமா இருந்த ஆச்சார்ய அபிநவகுப்தரின் 1000வது ஜெயந்தி வந்துள்ளது. அவரின் 1000வது ஆண்டை கொண்டாடுவதன் மூலம் சைவநெறியையும் சாதி சழக்குகள் அற்ற சமுதாயத்தையும் இழந்த காஷ்மீரின் ஆன்மிக அடையாளத்தையும் நம்மால் மீட்க முடியும்.

நாமும் ஆச்சார்ய அபிநவ குப்தரின் ஆயிரம் ஆண்டு கொண்டாட்டத்தில் இணைவோம். ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உணர்வை பரப்புவோம்.

அரசுப் பணத்தில் ஆவுடையார்கோயில் சிவாலயம் எழுப்பிய மாணிக்கவாசகருக்கு சிவனே வந்து உபதேசம் அளித்து, அவ்வூர் திருவிழாவில் தன் விக்ரகத்திற்கு பதில் மாணிக்கவாசகர் விக்ரகத்தை நந்தி மீது அமர்த்தி திருவீதி வலம் வரவேண்டும் என அருளியதால் அப்படியே நடப்பதாக கேள்வி. ஆலயத் திருப்பணி செபவருக்கு ஆண்டவனே அளித்த முக்கியத்துவம் அது. (படத்தில் நந்தி மீது ஆரோகணித்த கோலத்தில் மாணிக்கவாசகர்).