‘காவி பயங்கரவாத’ மாம்!  சரடு விட்ட காங்கிரஸ் கழுத்தில் சுருக்கு!

ஹிந்து இயக்கங்களை அழித்தொழிக்க, தீராத அவமானங்களை உண்டுபண்ண, சோனியா தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசு முடிவு செய்தது!

ஏற்கனவே நாடு முழுவதும் நடைபெற்று வந்த முஸ்லிம் பயங்கரவாத குண்டு வெடிப்புகளால், இஸ்லாமிய ஆதரவு” என்கிற கெட்ட பெயரிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் சோனியா அரசு திணறியது!

இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஓட்டுப்பொறுக்கி” அரசியல் காரணமாக ஒடுக்கமுடியவில்லை! வளரும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க. வேகத்தை தடுக்க முடியவில்லை என்ற சூழலில் சோனியா அரசு திக்குமுக்காடியது.

இதற்கிடையில் தாங்கள் தொடர்ந்து கொண்டிருந்த குண்டுவெடிப்புக்கு எதிர்வினையாற்றி வரும் ஹிந்து இயக்கங்களை சிக்கவைக்க  HUJI எனப்படும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹர்கத்உல்ஜிகாத்அல்இஸ்லாமி என்கிற பயங்கரவாத இயக்கம் முடிவு செய்தது.

இதன் விளைவாக 2006ல் செப்டம்பர் 9, 29 தேதிகளில் மாலேகான் என்னும் இடத்தில் இரண்டு குண்டு வெடிப்புகளையும் (41 பேர் பலி; 204 பேர் படுகாயம்) 2007 பிப்ரவரியில் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பும் (இதில் 68 பேர் பலி) அதே ஆண்டு மே 18ல் மெக்கா மசூதி குண்டு வெடிப்பும் (இதில் 9 பேர் பலி; 56 பேர் படுகாயம்) நிகழ்த்தியது.

HUJI தான் நிகழ்த்தியது என்பதை உறுதி செய்யும் விதமாக அகர்தலா, டெல்லி, ஆமதாபாத், பெங்களூர், ஜெய்ப்பூரிலும் 2008ம் ஆண்டு இதே இயக்கம் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி உயிர்ப்பலி கொண்டதை உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

ஆக இப்படி போய்க் கொண்டிருந்த கதையை திசைதிருப்ப 4 குண்டுவெடிப்புகளையும் காங்கிரஸ் பயன்படுத்திக்கொண்டது. இதை நான் சொல்லவில்லை. மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி (ஓய்வு) RVS மணி கூறியுள்ளார்.

இதன் முதல்கட்டமாக கடந்த வாரம் ‘காவி பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்ட ஹைதராபாத் மெக்கா மசூதி வழக்கை எடுத்துக் கொள்வோம்!

இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்த உடனேயே ஆந்திர பிரதேச காங்கிரஸ் அரசின் போலீஸ் ஏராளமானோரை விசாரித்து 19 முஸ்லிம்களைக் கைது செய்தது. அதில் 5 முஸ்லிம்களைக்  உண்மை கண்டறியும் சோதனை” நடத்தியதில் அவர்கள் பயன்படுத்திய வெடிமருந்து பங்களாதேஷிலிருந்து வாங்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்கள்.

இத்தாக்குதலில் HUJI தான் மூளையாக செயல்பட்டு உள்ளூர் முஸ்லிம்கள் ஸ்லீப்பர் செல்லாக பயன்படுத்தப்பட்டது தெரிந்தது.

வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்க உத்தேசித்திருந்த வேளையில் டெல்லி மேலிடத்திலிருந்து வந்த செய்தியால் பைல்கள் மாற்றப்பட்டன. பேப்பர்கள் திருத்தப்பட்டன. 19 முஸ்லிம்களும் விடுவிக்கப்பட்டனர். வழக்கு CBI க்கு மாற்றப்பட்டது.

மேலே சொன்ன கருத்தெல்லாம் என் கருத்தல்ல. ஓய்வுபெற்ற மத்திய உள்துறை அமைச்சக  அதிகாரி RVS மணியுடையது. இதை செய்யச் சொன்னது அப்போதைய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். அதன் விளைவாக 2011ம் ஆண்டு வனவாசி கேந்திர பொறுப்பாளர் சுவாமி அசீமானந்த், ஆர்.எஸ்.எஸ். விபாக் பிரசாரக் தேவேந்திர குப்தா போன்ற 5 பேர் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு கடுஞ்சிறையில் வாடினர். 8 ஆண்டு வழக்கு நடந்து இன்று ஒரு துளி ஆதாரம் கூட இல்லை” என அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதில் வழக்கு நடந்தது, பொய் வழக்கு ஜோடிக்கப்பட்டது” என்பதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், வழக்கு எதனால் போடப்பட்டது, இன்று விடுதலையானவுடன் காங்கிரஸ் நிலைப்பாடு என்ன என்பதைத்தான் கூர்ந்து பார்க்க வேண்டும்.

காங்கிரசின் செய்தி தொடர்பாளர் புனியா நாங்கள், ஹிந்து பயங்கரவாதம், காவி பயங்கரவாதம்” என்று என்றுமே சொன்னதில்லை என்கிறார்.

* அதன் மற்றொரு தலைவர் குலாம் நபி ஆசாத்தோ காங்கிரஸ் என்றும் ஹிந்து மதத்தை பழித்தது கிடையாது. காவி பயங்கரவாதம் என்று நாங்கள் சொல்லவே இல்லை என்கிறார்.

* 2009ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க தூதர் டி மோதி ரோமர் அவர்கள் தன் நாட்டுக்கு அனுப்பிய செய்தியில் தன்னுடன் விருந்துண்ட ராகுல் காந்தி, இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாத ஆபத்தை விட ஹிந்து பயங்கரவாதம் மிகவும் ஆபத்தாக உருவாகி வருகிறது என்று சொன்னதாக சொல்லியிருக்கிறார்.

* 2010ம் ஆண்டு போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில் உள்துறை மந்திரி ப. சிதம்பரம் காவி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பேசியுள்ளார். இதே பேச்சுக் களை 2013ல் அப்போதைய உள்துறை மந்திரி சுசீல் குமார் ஷிண்டேவும், திக்விஜய்சிங்கும் பேசியதாக அவர்களது ஹிந்து பத்திரிகையே எழுதி உள்ளது.

இவ்வளவு ஆதாரங்களுக்குப் பின்பும் காங்கிரஸ் இன்று இதை மறுக்க வேண்டிய அவசியம் என்ன?

அதுதான் நரேந்திர மோடி உருவாக்கி வைத்துள்ள ஹிந்து ஓட்டு வங்கி. அது சிந்தாமல் சிதறாமல் பாஜகவிற்கே சொந்தமாக இருப்பதால், 22 மாநிலங்களிலே ஆட்சியை பிடித்துவிட்டதால், ராஜ்யசபாவிலும் மெஜாரிட்டி பெற்று விட்டதால், கர்நாடகா தேர்தலில் ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்பதால் இப்படிப்பட்ட முன் ஜாக்கிரதை உணர்வுடன் பேசுகிறது.

ஒன்று மட்டும் நிச்சயம். நரேந்திர மோடியின் 4 ஆண்டு ஆட்சியில் ஒரு குண்டு வெடிப்போ, ஒரு பயங்கரவாத செயலோ, நாம் காணமுடியாததற்கு காரணம், பயங்கர வாதத்திற்கு எதிரான பாஜகவின் கடுமையான நிலைப்பாடுதான்.

இந்த யதார்த்த நிலவரம் காங்கிரசை பெருமளவு தண்டித்துவிட்டது. இன்னும் கையிலிருக்கும் ஒரே தென்பாரத அரசான கர்நாடகாவும் நாளை கைவிட்டு போகப்போவதும் உண்மை!

உண்மை எப்போதும் கசக்கும்.

 காங்கிரசுக்கு கர்நாடகம் கசப்பைத் தரப்போகிறது.

காவி பயங்கரவாதம் என்றவர்கள் காணாமல் போய்வருகிறார்கள்.