கல்விக் கட்டணத்தை ஏற்ற பா.ஜ.க

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகிலுள்ள பனமூப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி தங்கப்பேச்சி என்ற அரசுப் பள்ளி மாணவியின் குடும்பம் விவசாயத்தை பின்னணியாகக் கொண்டது. இவருடைய பெற்றோர்கள் தங்களின் நான்கு பெண் குழந்தைகளையும் விவசாய கூலி வேலை செய்து படிக்க வைத்து வருகின்றனர். இவர்களின் மூத்த மகளான தங்கப்பேச்சி,  நீட் தேர்வில் இரண்டுமுறை வென்றும் வீட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக கட்டணம் செலுத்த முடியாமல் இருந்தார். கல்லூரியில் சேர இடம் கிடைத்தது. அவரின் கல்விக் கட்டணத்தை அரசு செலுத்துகிறது. ஆனால், தங்குமிடம் போன்ற பிற செலவுகளுக்கு அவரிடம் போதிய பணம் இல்லை. இதனால் அவர் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட்டார். இதனை அறிந்த தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தங்கப்பேச்சியின் மருத்துவப் படிப்புக்கு பா.ஜ.க உதவும் என தெரிவித்துள்ளார்.