கலாபாணி பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியே – உத்தரகாண்ட் முதல்வர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதன் வரைபடங்களையும் அக்டோபர் 31 அன்று வெளியிட்டது மத்திய அரசு. இதில் களவாணி பகுதி பாரதத்துடன் இருந்ததற்கு நேபாள பிரதமர் கே.பி ஷர்மா ஒளி ஆட்சேபனை தெரிவித்தார்.இதற்கு கருத்து தெரிவித்த உத்தரகாண்ட் முதல்வர் ராவத் பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதிதான் கலாபாணி என்றார்.நேபாளம் அரசின் கருத்துக்கு எதிராக இந்த கருத்து இருக்கிறது என்று தெரிவித்தார். எனினும் பேச்சுவார்த்தை மூலம் சரி செய்து கொள்வோம். கலாபாணி பாரதத்தின் நிரந்தர பகுதியே இனியும் அப்படியே இருக்கும் என்றார்.

இது குறித்து வரலாற்றாசிரியர் சேகர் பதாக் அளித்த செய்தியில் சுகாவலி ஒப்பந்தத்தின் படி கலாபாணி பாரதத்திற்கு சொந்தமானது. 1816 ல்  பிரிட்டிஷ் அரசுக்கும் கூர்காக்களுக்கும்  ஏற்பட்ட ஒப்பந்தம் இது. ஆனால் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தற்போது இதை வைத்து அரசியல் செய்கிறது. இந்த பகுதியை பாரதம் காலி செய்யவேண்டும் என்று கூறிவருகிறது. நேபாள அரசாங்கமும் முதன்முதலாக இதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது. அரசு தெரிவித்த செய்தியில் நேபாளம் 1961 ல் காலாபாணியில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியதாகவும் இதற்கு பாரதம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளது.