கரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடித்த இந்தியர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்ஓ) இந்திய வம்சா வளியை சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் பணியாற்றி வருகிறார். அவரும் அவரது குழுவினரும் கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து சிஎஸ்ஐஆர்ஓ வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களது ஆய்வகத்தில் கரோனா வைரஸை வளர்த்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறோம். அந்த வைரஸுக்கு மருந்தும் கண்டுபிடித்துள்ளோம். இப்போது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலையில் உள்ளோம். அடுத்த 16 வாரங்களுக்குள் மனிதர்களுக்கு மருந்தை அளித்து சோதனை செய்வோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளி விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் கூறும்போது, “குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்துடன் இணைந்து புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு ஐஐஎஸ்சி முன்னாள் மாணவரான எஸ்.எஸ்.வாசன், பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஆப்பிரிக்காவை அச்சுறுத்திய எபோலா வைரஸ் தொடர்பான ஆராய்ச்சிகளுக்காக சர்வதேச அளவில் இவர் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.