கண்ணியமான கம்பீரக் காட்சி

ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் சங்க சீருடையில் அணிவகுத்து ஊரின் பிரதான வீதிகள் வழியே வீர வாத்திய இசைக்கு ஏற்ப காலடி வைத்து ஊர்வலமாக செல்வதைப் பார்க்காத நகரமே பாரதத்தில் இல்லை. ‘பதசஞ்சலன்’ என்று சங்கத்தில் அறியப்படும் அந்த வீறுநடை  நிகழ்ச்சி நடைபெறாத ஆண்டுகள் இல்லை என்பதற்கு சமம்.

சங்க லட்சியம் ஹிந்து தேசத்தை உன்னத நிலை அடையச் செய்தல் என்பதை படித்து, கேட்டு அறிந்த எவரும் அதை சாதிக்க நல்லதோர் சக்தியின் பின்பலம் இருப்பதை அறிந்து மகிழ ‘பதசஞ்சலன்’ உதவுகிறது.

கட்டுப்பாட்டால் வித்தியாசமான அமைப்பாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள ஆர்.எஸ்.எஸ் அதை கண் கூடாகக் காட்சிப்படுத்த பதசஞ்சலன் நடத்தி வருகிறது.

பதசஞ்சலனின் சிறப்பு அம்சங்கள்:

* பதசஞ்சலன் புறப்படும் நேரம், செல்லும் பாதை, அடையும் இடம் ஆகியவை முன்கூட்டியே பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகின்றன.

* பதசஞ்சலன் நடுவில் நிற்பதில்லை.

* பதசஞ்சலனின் எந்த கோஷமும் எழுப்பப்படுவதில்லை. வீர வாத்ய இசை (பாண்டு) வீறுநடைக்கு தாளமாக அமைகிறது.

* புனிதமான காவிக்கொடியை நடுநாயகமாக அணிவகுப்பில் அமைத்து பதசஞ்சலன் நடைபெறுகிறது.

* சங்க பிரார்த்தனை முடித்து துவங்கும் பத சஞ்சலன் சங்க சொற்பொழிவுடன் நிறைவடையும்.

சங்க ஸ்தாபகர் டாக்டர் கேசவர் இருந்த காலத்தில், நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் ரயில் பயணத்தின்போது, ஒரு ஊரில் ஆர்.எஸ்.எஸ் பதசஞ்சலன் நடப்பதைப் பார்த்தார். டாக்டர் கேசவரை சந்திக்க அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதுபோல பொதுமக்கள் ஆர்.எஸ்.எஸ் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்ல பதசஞ்சலன் வாய்ப்பளிக்கிறது.

போன வருஷம் ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு. அதையொட்டி சென்னையில் பதசஞ்சலன் பிரம்மாண்டமான அளவில் நடைபெற அனுமதியுடன் ஏற்பாடு நடைபெற்றது. ஆனால் மர்மமான விதத்தில் காவல்துறை அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் வழக்குத் தொடர்ந்தது. அக்டோபர் 3 அன்று நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி பதசஞ்சலன் தென் தமிழக நகர்களில் நவம்பர் 13 அன்று நடைபெறுகிறது. தீர்ப்பு விவரம் கீழே.

 

ஆர்.எஸ்.எஸ். பேரணியை நவம்பரில் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி

அக்டோபர் 9ல் ராமானுஜரின் 1000வது ஜயந்தி அம்பேத்கரின் 125வது ஜயந்தி, விஜயதசமி ஆகியவற்றை கடைப்பிடிக்கும். கோவை, திருச்சி, கன்னியாகுமரி, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். சீரூடை அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்குமாறு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: உள்ளாட்சித் தேர்தல் இந்த மாதம் நடைபெறுவதால், அணிவகுப்புக்கு காவல் துறை பாதுகாப்பு வழங்க முடியாத நிலை உள்ளது. மாறாக, நவம்பர் 6 அல்லது 13ல் அணிவகுப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

(தினமணி செய்தி)