கடவுளின் விருப்பம்: மகான்களின் வாழ்வில்

வித்யாரண்யர் என்ற மகான் தன்னுடைய ஏழ்மையை விரட்ட மஹாலட்சுமியை பூஜித்தார். ‘இந்தப் பிறவியில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை’ என்று மஹாலட்சுமி சொன்னவுடன், உடனே வித்யாரண்யர் சன்யாச ஆசிரமம் வாங்கிக் கொண்டு விட்டார்.

அம்மா… மறு ஜென்மம் வந்துவிட்டது, இப்போதாவது எனக்கு அருள் செய்” என வேண்டினார். மகாலட்சுமியும் தன் வாக்குப் பிரகாரம் சொர்ணத்தை அள்ளிக் கொடுத்தாள்.

சுற்றிலும் எங்கு பார்த்தாலும் தங்கமும், நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யர் அதைப் பார்த்தவுடன் தாங்கமுடியாத ஏமாற்றத்துடனும் துக்கத்துடனும் ‘அடடா தந்திரம் செய்வதாக நினைத்து கடைசியில் நானே ஏமாந்து விட்டேனே! வீட்டின் ஏழ்மை போக தனம் யாசித்தேன். இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு எதற்கு வீடு, பணம்? சன்யாசி பணத்தைத் தீண்டவே கூடாதே! நானாகவே உபத்திரவத்தை வேண்டி வாங்கிக் கொண்டேனே’ என்று அழ ஆரம்பித்து விட்டார்.

இதே போல்தான் நாமும் பல தடவை கடவுளிடம் என்ன வேண்டுகிறோம் என்று புரியாமல் கேட்கிறோம். நம் இஷ்டம் என்று ஒன்று இல்லாமல், கடவுள் விருப்பப்படி நமக்கு எது தேவையோ அதைக் கொடுப்பார் என முழு நம்பிக்கையுடன் இருந்தால் பிறகு வருந்த வேண்டிய அவசியம் வராது.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்