கங்கை நதியை பிரதமர் மோடி ஆய்வு செய்தார்

நமாமி கங்கை திட்டத்தை” மறு ஆய்வு செய்யவும், கங்கை நதி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கவும் பிரதமர் மோடி,உ.பி., மாநிலம் கான்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர், சந்திரசேகர் ஆசாத் வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் நடந்த தேசிய கங்கை கவுன்சில் கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், பீஹார் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கங்கை நதி தூய்மை, பாதுகாப்பு , புத்துணர்ச்சி குறித்து ஆலோசனை நடந்தது.

கான்பூரில் உள்ள அடல் படித்துறையில் இருந்து மோட்டார் படகு மூலம் பிரதமர் மோடி, கங்கை நதியை ஆய்வு செய்தார்.