கங்கா சாகர் மேளா

வட மாநிலங்களில் மகர சங்கராந்தி என அழைக்கப்படும் பொங்கல் அன்று, கங்கையும் வங்காள விரிகுடாவும் சங்கமிக்கும் இடத்தில் புனித நீராடுவதற்கும், அன்று கபில முனிவரின் கோயிலில் பிரார்த்தனை செய்வதற்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தேசமெங்கிலும் இருந்து வருவார்கள். இது ‘கங்கா சாகர் மேளா’ என அழைக்கப்படுகிறது. விஷேஷமான இந்த விழாவில் பங்கேற்க வருவோர், கொரோனா தடுப்பூசிகள் இரண்டு டோஸ் செலுத்தியிருக்க வேண்டும், இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும், கொரோனா வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். தெற்கு 24 பர்கானாஸில் உள்ள சாகர் தீவை அடைவதற்கு வாகனங்களில் கூட்டமாக வரவேண்டாம் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.