ஒரு நீதிபதி இப்படிப் பேசியிருக்கக்கூடது

நீதிபதி ஹரிபரந்தாமனைபெரிய மனிதர்என்கிறார் கட்டுரையாளர். இந்தப் பெரிய மனிதர்தான்பாஸிஸத்தை எதிர்க்கும் மக்கள் கூட்டமைப்புஎன்ற நக்ஸல் கூட்டத்தில் 2015 ஜனவரியில் பேசும்போது பகவத் கீதையை ஆதரித்துப் பேசியிருந்த ஒரு மூத்த டெல்லி நீதிபதியை விளாசியிருக்கிறார். ‘நான் மத நம்பிக்கை அற்றவன்; ஆனால் எல்லா மதங்களிலும் தலையிடும் உரிமை உள்ளவன்என்று பேசிய பெரிய மனிதர் இந்த ஹரிபரந்தாமன்!

ஹபூப் பாட்சா என்பவர் சோகோ ட்ரஸ்ட் எனும் அமைப்பை நடத்துகிறார். இவர் ஒரு கூட்டத்தை மதுரையில் ஏற்பாடு செய்துள்ளார். ‘சகிப்புத்தன்மையின்மை, கருத்து சுதந்திரம்’ பற்றி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஹரிபரந்தாமன் அங்கே பேசியதில் பல முத்துக்களை உதிர்த்து pagd-15,-16_pic1தள்ளியிருக்கிறார். அவர் கருத்துகளும் பதிலும் உங்கள் பார்வைக்கு.

நீதிபதியின் பார்வை 1. அரசியலும் மதமும் வெவ்வேறு விஷயங்கள். இவ்விரண்டையும் கலக்கக்கூடாது என்று சொல்லியுள்ளார்.

டூ அதை சொன்ன இடம், நபர்கள்தான் பிரச்சினை, நீதிபதி அவர்களே. இந்த நாட்டில் உள்ள முதல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ், பெயரில் கூட மதம் இல்லை. இரண்டாவது கட்சியான முஸ்லிம் லீக் துவங்கும்போதே மதப்பெயருடன்தான் துவங்கப்பட்டது. முதலாவது, தேசிய விடுதலைக்காக போராடியது. இரண்டாவது முஸ்லிம்கள் உரிமைக்காக போராடியது. இது உங்களுக்கு தெரியாதா நீதிபதி அவர்களே?

நீதிபதியின் பார்வை 2. சுதந்திரப் போராட்டத்தில் ஹிந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் சேர்ந்து போராடினார்கள். இதில் காந்தி ரகுபதி ராகவ பாடலில் ‘ஈஸ்வர அல்லா தேரே நாம்’ என்ற வரியை சேர்த்தார்.

டூ சுதந்திர போராட்டத்தில் கிறிஸ்தவர்களா? யார் அந்த கிறிஸ்தவர்கள்? எங்கே ஒரு நாலு பெயர் சொல்லுங்கள். ஹிந்துக்கள் பட்டியலிட்டு மாளாது. 1857ல் முதல் சுதந்திர போரில் சேர்ந்து போராடிய ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், பின்னர் வந்த எல்லை காந்தி கான் அப்துல் கபார் கான், அஷ்பகுல்லா கான், மவுலான அபுல் கலாம் ஆசாத் என்று பல முஸ்லிம்கள் உண்டு. கிறிஸ்தவர்கள் இருந்தார்களா? தங்கள் மதத்தவர்கள் ஆள்கிறார்கள் என்றுதானே எதிர்க்காமல் விட்டார்கள்? அதனால்தானே மதமாற்றம் கூடாது என்கிறோம்? ’ஈஸ்வர அல்லா தேரே நாம்’ – மாற்றப்பட்டது ஹிந்து பாடல். மாற்றியவர் ஹிந்து. இஸ்லாமிய பாடல் அல்ல. இதை முஸ்லிம்கள் பாடவும் இல்லை ஏற்கவும் இல்லை. பாடல் என்ன, வந்தே மாதரம் என்ற கோஷத்தை கூட முஸ்லிம்கள் ஏற்கவில்லையே? இது வெறும் சுதந்திர கோஷம்தானே என்று கூட ஏற்கவில்லையே? இஸ்லாமுக்கு விரோதம் என்று வந்தே மாதரம் பாட்டு பாடக்கூடாது என்று கூறி 1923ல் காகிநாடாவில் காங்கிரஸ் தலைவர் முகமது அலி மேடையை விட்டு இறங்கியது உங்களுக்குத் தெரியாதா நீதிபதி அவர்களே? அப்போது அவருடன் கீழே நின்ற அனைத்து முஸ்லிம்களும் சேர்ந்து வெளியேறியது உங்களுக்கு தெரியாதா நீதிபதி அவர்களே?

நீதிபதியின் பார்வை 3. அரசியல்வாதிகள் மதத்தை உபயோகித்து பதவிக்கு வந்து எழுத்தாளர் கல்பர்கியை கொன்றார்கள்.

டூ பாஜக ஒரு நாளும் ‘நாங்கள் ஹிந்துக்கள் அதனால் எங்களுக்கு வாக்களியுங்கள்’ என்று சொன்னதில்லை. ஹிந்துஸ்தானத்தில் பிறந்த அனைவரும் இனத்தால் ஹிந்துக்கள். வெவ்வேறு மதங்களை பின்பற்றலாம். ஆனால் நாம் இனத்தால் ஹிந்துக்கள் என்று சொல்லிவருகிறார்கள். கம்யூனிஸ்டுகளும், மத மாற்றம் செய்யும் கிறிஸ்தவ கட்சிகளும் முஸ்லிம்களை முன்னேற விடாமல் தடுக்கும் முஸ்லிம் கட்சிகளும் திரும்ப திரும்ப கீகுகுஐயும், பாஜகவையும் பூச்சாண்டி போல காட்டி முஸ்லிம்களை முன்னேற விடாமல் உண்மையை பார்க்க விடாமல் தடுக்கின்றனர். இந்த சிறு உண்மை எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது நீதிபதி அவர்களே? கல்பர்கியை கொன்றவனை பிடித்து தூக்கிலிடுங்கள். எந்த ஹிந்து அமைப்பும் தடுக்காது. நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டத்தை மீறியவனை தமிழன், சிறுபான்மை இனத்தவன் என்றெல்லாம் சொல்லி காப்பாற்ற மாட்டோம். கீகுகு தன் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் இரங்கல் தெரிவித்ததே இவருக்காக?

நீதிபதியின் பார்வை 4. மாட்டுக்கறி தின்றதால் கொலை செய்துள்ளதை வாய்மூடி மௌனியாக பார்க்கிறோம்.

டூ நீதிபதியான உங்களுக்கு தீர்ப்பு எழுதும் முன் இரு பக்கத்து வாதத்தையும் நியாயத்தையும் கேட்டுவிட்டு தீர்ப்பு சொல்லவேண்டும் என்று தெரியும். தாத்ரியில் மாட்டுக்கு சொந்தக்காரரான ராகுல் யாதவை முகமது அக்லக் சுட்டதல்தானே மற்றவர்கள் நியாயம் கேட்கப்போனபோது தள்ளு முள்ளு ஏற்பட்டதில் அக்லக் இறந்தார்? துப்பாக்கியால் சுடப்பட்ட ராகுல் யாதவ் இன்னும் மருத்துவமனையிலிருந்து வெளியே வரவே இல்லையே? இது தெரியாமல் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள், நீதிபதி அவர்களே?

நீதிபதியின் பார்வை 5. ஆமிர்கான் மனைவியின் கருத்தை சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கொடும்பாவி எரிக்கிறோம். இதெல்லாம் சகிப்புத்தன்மையின்மைதானே?

டூ கொடும்பாவி எரிப்பு என்றீர்கள். ஆமிர்கானையோ, அவர் மனைவியையோ தாக்கினால்தான் தவறு. உயிரற்ற கொடும்பாவிதானே எரித்தார்கள்? ஒரு வைக்கோல் பொம்மையை எரிப்பதைகூட தங்களால் சகிக்க முடியவில்லை. நீங்கள் சகிப்புத்தன்மை பற்றி பேசுகிறீர்கள்! தங்களின் தேசமும், மதமும், நம்பிக்கையும் மட்டம் தட்டப்பட்டால் அனைவரும் சகிக்கவேண்டுமா நீதிபதி அவர்களே?

நீதிபதியின் பார்வை 6. அரசியல் சாஸன ஷரத்து 48ல் கறவை மாடுகளையும் பால் தரும் உயிரினங்களையும் கொல்லக்கூடாது என்று போட்டுள்ளது. 1948ல் நடந்த அந்த கூட்டத்தில் ஜமீன்தார்களும், வசதியானவர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

டூ என்ன சொல்ல வருகிறீர்கள் நீங்கள்? அன்றைய தேதியில் சுதந்திரம் கிடைத்ததே பலருக்கு தெரியாதே?அரசியல் சாஸனம், நாடாளுமன்றம், மக்களாட்சி என்றால் என்னெவென்று பலருக்கு தெரியாதே? முதலில் நாடாளுமன்றத்தில் சாமானியன் அனுமதிக்கப்படுவானா? உள்ளே போக முடியுமா? அவனை யாராவது என்றாவது மதித்தார்களா? ஷரத்து 48ல் இப்படி போட்டுள்ளது, அதனால் கறவை இனங்களை கொல்லக்கூடாது என்று என்றாவது யாராவது தெளிவாக வழிகாட்டினீர்களா? நாடாளுமன்றத்தில் உள்ளே போகவில்லை என்றால் உடனே அவனுக்கு இதில் உடன்பாடில்லை என்று சொல்வீர்களா?   பசுவைக் கொல்லக்கூடாது என்று சட்டத்தை நிறைவேற்றுவது அந்தந்த மாநிலங்களின் கடமை என்று ஒரு பெரும் குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தியுள்ளீர்கள்? அரசியல் சாஸனத்தில் சொன்னாலே போதும். அதை மீறக்கூடாது என்று சொன்னால் எவ்வளவு தெளிவாக இருக்கும்! இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா நீதிபதி அவர்களே?

அழைத்தார்கள் என்று மனம் போன போக்கில் என்னென்னவோ பேசிவிட்டீர்களே நீதிபதி அவர்களே? நீதிபதி என்றால் கடவுள் போல பார்க்கும் தேசமிது. தனிப்பட்ட கொள்கைகளை தாண்டி தர்மப்படி சிந்திக்கவேண்டாமா? உங்களை போன்ற பெரிய மனிதர்களுக்கு என் போன்ற சிறியவர்கள் புத்திமதி சொல்லும் நிலைக்கு நீங்கள் உங்களை தாழ்த்திக்கொள்ளலாமா? பிறருக்கு வழிகாட்டியாக தாங்கள் இருக்க வேண்டாமா?