ஒண்ணுதான்!

விளக்கேற்ற ஒருத்தி வீட்டுக்கு வந்தபிறகு, தாமதமாக வரும் கணவனை காரணம் கேட்க ஒரே ஒரு நபர்தான் இருப்பார் என்ற இந்த ‘முகநூல் ஆராய்ச்சி’ யை சற்றே விரிவுபடுத்தி பார்ப்போம்.

சினிமாவுக்கு போகிறோம். 120 ரூபாயாக இருந்த டிக்கெட் வாங்க 153 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. பழி ஜிஎஸ்டி மீது. உண்மை என்ன?

இதற்கு முன்பு ரூ. 120 டிக்கெட் பின்வருமாறு பிரிக்கப்பட்டிருந்தது: டிக்கெட் விலை ரூ. 83.30, கேளிக்கை வரி ரூ. 35, இதர வரி ரூ. 1. மொத்தமாக ரூ. 120.

இப்போது ரூ. 100க்கும் அதிகமாகக் கட்டணம் இருந்தால் 28% ஜிஎஸ்டி வரி. அதற்குக் குறைவாக எனில் 18% ஜிஎஸ்டி.

ரூ. 83.30 உடன் ஜிஎஸ்டி வரியைச் சேர்ப்பதே சரியான நடைமுறையாக இருக்கும். ஏனெனில் கேளிக்கை வரி குறித்து அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆனால் திரையரங்குகள் நேரடியாக ரூ. 120 உடன் 28% வரியைச் சேர்த்துவிட்டார்கள். இதனால் டிக்கெட் கட்டணம் ரூ. 153.60 ஆக உயர்ந்துள்ளது. அதாவது பழைய வரியைக் கழிக்காமல் நேரடியாக ரூ. 120 உடன் ஜிஎஸ்டி வரி சேர்க்கப்பட்டதால் டிக்கெட் கட்டணம் தமிழ்நாட்டில் மறைமுகமாக 45% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களும் திரைப்பட ஆர்வலர்களும் அதிருப்தி அடைந்துள்ளார்கள். இன்று ஆன்லைனில் ரூ. 120 டிக்கெட்டைப் பதிவு செய்ய முயன்றால் ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 189 தரவேண்டியிருக்கும்! சமூக வலைத்தளத்தில் இதுகுறித்த தங்கள் கருத்துகளைப் பலரும் தொடர்ந்து பதிவு செய்துவருகிறார்கள்.

மொத்தத்தில் ஜிஎஸ்டியால் குழம்பிய நபர்களை விட குழப்பும் நபர்களே மக்களின் துன்பத்துக்குக் காரணம். ஜிஎஸ்டி வரி அல்ல.