மாதங்களின் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. அத்தகைய பேறு மார்கழி மாதத்திற்கு கிடைத்திருக்கிறது. அதிகாலையில் எழுந்ததிருந்து காலை கடன்களை முடித்து, குளித்து கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிற மாதம். குறிப்பாக இளம்பெண்கள் அவரவர்களுக்கு நினைத்த வரன் அமைவதற்கும் தங்களின் வாழ்க்கையில் வேண்டியது கிடைப்பதற்க்கும் மாதம் முப்பது நாளும் இறைவனை வேண்டிக் கொண்டு பாவை நோம்பு மேற்கொள்ளும் மாதம் மார்கழி.
இந்த மாதத்தில் ஆன்மிக அன்பர்கள் பாவை வழிப்பாட்டு பாடலை தந்த ஆண்டாளாகவே தங்களை பாவித்து கொண்டு இறைவனை மனதுருக வழிபடுவது சிறப்பம்சம். இந்த வழிபாடு ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் எல்லா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. குறிப்பாக திருவெண்பாவை பாடலை தந்த மாணிக்கவாசகர் தன்னை ஒரு பெண்ணாகவே பாவித்து சிவபெருமானை நோக்கி உள்ளம் உருக பாடுகின்ற இந்த திருவெம்பாவை பாடல்கள் சிறு குழந்தைகளுக்கும் அவர்களின் மனதில் ஆழ்ந்த பக்தியை உருவாக்குகிறது.
தென் மாவட்டங்களில் எண்பதுகளில் தொடக்கத்தில் புற்றீசல் போல் புறப்பட்ட மதமாற்ற கும்பல்களின் வேகத்தை மட்டுபடுத்தியது இந்த பாவை வழிபாடு தான். ஒவ்வொரு கிராமத்தில் எதாவது ஒரு கோயிலில் இறை வழிபாட்டை ஏற்படுத்தியதும் இந்த வழிபாடு தான். சமய நம்பிக்கையை மட்டுமே தெரிந்த நமது குழந்தைகளுக்கு முதன்முறையாக பாவை பாடல்களையும் போதித்தது இந்த மாதத்தில் தான். இது பக்தியையும் தாண்டி சமய ஒற்றுமையை ஏற்படுத்தியது. பாவை வழிபாட்டு குழுக்கள் ஒன்றிணைந்து சமய ஒற்றுமையும் பேணியது. இன்றைய தேவை சமய பக்தி மட்டும் அல்ல சமுதாய ஒற்றுமையும்தான். அதனை இந்த பாவை வழிபாடு கொண்டு வரட்டும்.
தினமும் ஒரு திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களுக்கு விளக்க உரையை தர இருக்கிறார் ஆன்மிக அன்பர் ஆர். கிருஷ்ணமூர்த்தி