எஸ்.எஸ்.எஸ், சேவா இன்டர்நேஷனல் வர்ஷ் பிரதிபதா

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாசில், ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம் டல்லாஸ் மற்றும் சேவா இன்டர்நேஷனல் ஆகிய அமைப்புகள், டி.எஃப்.டபிள்யு ஹிந்து ஏக்தா கோயில் மற்றும் 54 பல்வேறு கூட்டு அமைப்புகளுடன் இணைந்து, வர்ஷ் பிரதிபதா (ஹிந்துக்களின் புது வருடம்) விழாவை கொண்டாடியது. இந்த நிகழ்வை இர்விங் மேயர் ரிக் ஸ்டாஃபர் மற்றும் ஸ்டாஃபர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 32 அமைப்பின் தலைவர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து தீபம் ஏற்றியது இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக இருந்தது. விழாவில், 2 மணி நேர சாந்தி யாகத்துடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் பலர் கலந்து கொண்டனர், அதைத் தொடர்ந்து மூன்று மணி நேரம் அரங்கம் நிரம்பிய 23 குழுக்களின் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாரதத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 35க்கும் மேற்பட்ட உணவு வகைகளை வழங்கும் 15க்கும் மேற்பட்ட உணவு அரங்கங்கள் மற்றும் பல விளையாட்டு அரங்குகளுடன் இந்த நிகழ்வு ஒரு மேளாவைப் போல பிரம்மாண்டமாக ஆண்போரை ஈர்க்கும் வகையில் இருந்தது. நிகழ்வு நடந்த இடத்தின் முற்றத்தில் ‘தோல் தாஷா’ குழுவினரின் ஒரு மணி நேர நடனத்துடன் இந்நிகழ்வு இனிமையாக முடிவடைந்தது. 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த விழாவில் 1,300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இது இதில் பங்கேற்ற அனைத்து கூட்டு அமைப்புகளிடமிருந்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. டல்லாஸில் முதன்முறையாக, ஹிந்து புத்தாண்டைக் கொண்டாட பல அமைப்புகள் ஒன்று கூடின, அனைவரும் மகிழ்ந்தனர், மிக முக்கியமாக ஹிந்து ஒற்றுமை இதில் வெளிப்பட்டது.