என்சிஇஆர்டி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக மாற்றம்

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலை, நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலின் 63வது நிறுவன தின விழாவில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை அறிவித்தார்.

என்சிஇஆர்டி ஒரு ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாகமாறுவது, உலகளாவிய ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய கல்வி நிலப்பரப்பில் பங்களிப்புகளுக்கான வாய்ப்புகளை வழங்கும். விழாவில், என்சிஇஆர்டி உருவாக்கிய 3 முதல் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான விளையாட்டு அடிப்படையிலான கற்பித்தல் பொருள், மாற்றத்திற்கான கருவியாக வெளிவரும் என்றும், இதன் மூலம் நாட்டின் 10 கோடி குழந்தைகள் பயன்பெறுவார்கள் என்றும் மத்திய கல்வி அமைச்சர்கூறினார்.

என்சிஇஆர்டி- யின் 7 பிராந்திய மையங்களிலும் ஆக்மென்டட் ரியாலிட்டி, வர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை அமைக்க மத்திய அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். நாட்டின் குழந்தைகள் தொழில் புரட்சி 4.0.- க்கு தயாராக வேண்டும்.

இந்தியாவின் கோவிட்-19 மேலாண்மை, சந்திரயான்-3 போன்ற தலைப்புகளில் உண்மைத்

தகவல்களைக் கொண்ட பல்வேறு தலைப்புகளில் சிறிய கையேடுகளை உருவாக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.