எதுவும் வீணானதல்ல

கொல்கத்தாவில் பிரபல சமூக சேவகர் ஸ்ரீ ஈஸ்வரசந்திர வித்யாசாகரின் வீட்டிற்கு ஸ்ரீகுதிராம் போஸ் என்ற வசதிமிக்க நபர் வந்தார்.

வித்யாசாகர் அவருக்கு தின்பதற்கு ஆரஞ்சுப் பழங்களைக் கொடுத்தார். வந்தவர் பழத்தை உரித்து, அதன் சுளைகளை உறிஞ்சிவிட்டு அவற்றைத் தூக்கி எறிந்தார். அதைக் கண்ட வித்யாசாகர், ‘‘அவற்றை தூக்கி எறிய வேண்டாம். மிச்சத்தை நல்லமுறையில் உபயோகப்படுத்த முடியும்’’ என்றார்.
‘‘நான் சாப்பிட்டுவிட்ட இவற்றை யாருக்குக் கொடுப்பீர்கள்?’’ அது எந்த வகையில் பிறருக்கு உதவும் என்று வியப்புடன் அவர் கேட்டார்.
‘‘உறிஞ்சிவிட்ட ஆரஞ்சு சுளைகளை ஜன்னலுக்கு வெளியே வைத்து விட்டு வந்து விடுங்கள், பிறகு தெரியும்’’ என்றார் வித்யாசாகர். அவற்றை அங்கே வைத்து விட்டு வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் காகங்கள் வந்து கொத்தித் தின்று கொண்டிருந்தன.

‘ஒரு பொருள், ஏதாவது ஒரு உயிருக்குப் பயன்படுகின்ற வரையில், அதை வீணாகத் தூக்கி எறியக்கூடாது. மண்ணோ, தூசியோ படாமல் காப்பாற்றி வைக்க வேண்டும். ஏதாவது ஒரு உயிருக்கு அது பயன்படமுடியும்’’ என்றார் வித்யாசாகர்.

வீணாகும் பொருளில் கூட வித்யாசாகர் கொண்டிருந்த மதிப்பைக் கண்டு வியப்படைந்தார்

ஸ்ரீ குதிராம் போஸ்!