எட்டாவது ஹிந்து ஆன்மிக, சேவை கண்காட்சி நவீன அர்ஜுனனுக்கு நல்லதொரு விஸ்வரூபம்!

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கொடுத்து வாழ வேண்டும் என்பதை உள்ளார்ந்த கடமையாகக் கொண்டு செயலாற்றி வருபவன் ஹிந்து, அவர்தம் குடும்பம். எனவேதான் பிற மதங்களில் மத அமைப்புகள் கொடுப்பது போல அமைப்புகளின் கொடையாக ஹிந்துக்களின் கொடையும் பங்களிப்பும் பார்க்கப்படவில்லை, அளவிடப்படவில்லை.

கொடுத்தவரோ கொடுத்த ஹிந்துமத அமைப்புகளோ அதனை விளம்பரம் செவதில்லை. விளம்பரம் இல்லாத செயல் பொதுவெளியில் வருவதில்லை. எனவே தான் ஹிந்துக்களிடம் கருணை குறைவு என்ற தவறான பிரச்சாரம். பொது வெளியில் எடுபட்டிருக்கிறது.

உண்மை என்ன?  ஹிந்துக்கள் தாராளமாக கொடுக்கிறார்கள், ஹிந்து அமைப்புகள் விளம்பரமின்றி தாரளாமாக சேவை செகிறார்கள் என்பதை பல்வேறு அமைப்புகளை அழைத்து, கலந்து கொள்ளச்செது, அவர்கள் செயும் சேவையை பதாகையாக வைத்து வெளிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சி. கண்காட்சியில் இடம்பெறும் அமைப்புகளின் சேவைகளை ஒன்றாகக் கணக்கெடுத்து, என்னென்ன வகையான சேவைகள், எத்தனை செலவில், எத்தனை மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது பதாகையாக வைக்கப்படுகிறது. பார்ப்பவர்கள் பிரமிக்கிறார்கள்.

ஹிந்து இயக்கங்கள் மட்டும் ஆண்டொன்றுக்கு பல ஆயிரம் கோடிக்கு சேவை செகின்றனர் நாட்டில் ஆறில் ஒருவர்  இந்த சேவையின் மூலம் பயன்பெறுகிறார். சேவைப் பணியில் முழு நேர ஊழியர்கள், பகுதி நேர ஊழியர்கள் என லட்சக்கணக்கானோர் ஈடுபடுகிறார்கள் என்று அறியும் போது, நம்மை நாமும் இந்த சேவை வேள்வியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒருவருக்குத் தோன்றாமல் இருக்க முடியாது.anmiga-manadu

சேவையில் நாட்டம் உள்ள ஒருவருக்கு, தனது மனதுக்குப் பிடித்த சேவை செவதற்கு இனி அந்நிய மத சேவை அமைப்புகளை நாடிச் செல்ல வேண்டியதில்லை, நம்மிலேயே இத்தனை அமைப்புகள் இருக்கின்றன, இவற்றில் ஒன்றை தேர்வு செது சேவை செதால் போதுமானது என்ற விழிப்புணர்வு இந்தக் கண்காட்சி ஏற்படுத்திவிடுகிறது. சேவை செதுவரும் அமைப்புகளிடையேயும்  இணக்கத்தையும் ஏற்படுத்துகிறது இக்கண்காட்சி.

கடந்த 2009ம் ஆண்டு வெறும் 38 அமைப்புகளுடன் துவங்கியது இக் கண்காட்சி. அடுத்தடுத்த ஆண்டுகளில் 98 அமைப்புகள், 156 அமைப்புகள், 200 அமைப்புகள், 250 அமைப்புகள் என உயர்ந்து இந்த எட்டாவது ஆண்டில் 300 அமைப்புகளை இடம்பெறச் செதுவிட்டது.

அமைப்பு ரீதியாக இல்லாத மதத்தில் அமைப்புகள் எப்படி வருகின்றன என்ற கேள்வி எழலாம். பதில் இதுதான்:

உதாரணமாகச் சோல்ல வேண்டுமானால், பாரம்பரிய சிறப்புமிக்க திருவாவடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், திருப்பானந்தாள் ஆதீனம், கௌமார மடம், வானமாமலை மடம், த்ரிதண்டி சின்ன ஜீயர் மடம், காஞ்சி சங்கராசார்யார் மடம் போன்ற பாரம்பரிய மடங்களும், சற்றே பழையதான ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், ஆர்ய சமாஜம், திருப்பராத்துறை ராமகிருஷ்ண தபோவனம் போன்ற அமைப்புகளும், நவீன பெருநிறுவன மடங்களா பார்க்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் வாழும் கலை, மாதா அமிர்தானந்தமயி ஆஸ்ரமம், சின்மயா ஆஸ்ரமம், ஈஷா யோகா, சாபாபா அறக்கட்டளை, பதஞ்சலி யோகா, விவேகானந்த கேந்திரம், இஸ்கான் எனப்படும் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம், ப்ரம்ம குமாரிகள் இயக்கம்,  காயத்ரி பரிவார் போன்ற அமைப்புகளும், சேவா பாராதி, ஏகல் வித்யாலயா, எம் ஃபார் சேவா போன்ற அமைப்புகளும், திருமலை திருப்பதி தேவஸ்தானம், திருவாங்கூர் தேவஸ்தானம், வேலூர் நாராயணி அம்மன் பீடம், மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பீடம் போன்ற அமைப்புகள், விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேத பாரதி, வேத விஞ்ஞான ஆராசி மையம், தமிழ்நாடு க்ராஹக் பஞ்சாயத்து போன்ற இயக்கங்கள், சாதிய மணத்தோடு ஹிந்துவா கலந்து சேவை செயும் தேவேந்திர வேளாளார் தன்னார்வ அறக்கட்டளை, ரெட்டி நலச்சங்கம், கொங்கு வேளாளர் சங்கம், யாதவ மகா சபா, நாடார் மகாஜன சங்கம் ஆகிய அமைப்புகளும் ஆண்டுதோறும் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.

ஆன்மிகக் கண்காட்சியை ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை நடத்துகிறது  அதே வேலையில் இங்குள்ள கலாசார நிகழ்ச்சிகளை ஐ–இகூ எனப்படும் (ஐணடிணாடிச்ணாடிதிஞு ஞூணிணூ –ணிணூச்டூ ச்ணஞீ இதடூணாதணூச்டூ கூணூச்டிணடிணஞ்) அமைப்பு பொறுப்பேற்று நடத்துகிறது. இந்த அமைப்பு கண்காட்சிக்கான தத்துவப் பின்னணி என்ன என்பதை தெரிவுசெது, அது பல்வேறு கல்வி நிலையங்களில் வித விதமான நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களை கலாசார நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கிறது. இதன் மூலம் ஹிந்து வாழ்க்கை மூல்யங்கள் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் எடுத்துச் சோல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, மறைந்துபோன, மறைந்து கொண்டிருக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளையும் அவர்களுக்கு நினைவுபடுத்தி, பயிற்றுவித்து, போட்டி நடத்தி அவர்களை கன்காட்சிக்கு அழைத்து வருகிற காரணமா திகழ்கிறது இந்த ஐ–இகூ அமைப்பு.

கண்காட்சியை நடத்தும் ஹிந்து ஆன்மிக சேவை அறக்கட்டளை மற்றும் கண்காட்சிக்கு கருத்தியல் வடிவம் வழங்கும் ஐ–இகூ ஆகிய அமைப்புகளில் முக்கியமானவர்கள் எஸ்.குருமூர்த்தி, தொழிலதிபர் கணபதி, ஆடிட்டர் பிரபாகர், ஹரிஹரன், ராஜலக்ஷ்மி ஆகியோர். மறைந்த தயானந்த சரஸ்வதி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று தேனி சித்பவானந்த ஆஸ்ரமத் தலைவர் தவத்திரு. ஓம்காராநந்த ஸ்வாமியின் தலைமையில் நடைபெற்றுவரும் தர்ம ரக்ஷண சமிதி அமைப்புதான் கண்காட்சியின் உணர்வா திகழும் தன்னார்வ தொண்டர்களை கண்காட்சிக்கு வழங்குவதோடு, கருத்தியல் ரீதியாகவும் தன் பங்களிப்பை நல்கி வருகிறது.

ஆறு குறிப்பிட்ட விஷயங்களில் கண்காட்சி கவனம் செலுத்திவருகிறது. 1. வனப்பாதுகாப்பு, வன விலங்குகள் பாதுகாப்பு

  1. சுற்றுச் சூழல் பாதுகாப்பு 3. ஜீவராசிகளை பேணிக் காப்பாற்றுதல் 4. பெற்றோருக்கு மரியாதை, குடும்ப வாழ்வின் பண்புகள், பொது வாழ்வின் பண்புகளை கடைப்பிடித்தல்
  2. பெண்மையை போற்றுதல் 6. தேசபக்தி உணர்வூட்டுதல்.

இவை ஏதோ கண்காட்சி நிர்வாகம் புதிதாக உருவாக்கிய கருத்தியல் என எண்ணி விட வேண்டாம். ‘பஞ்ச மஹா யக்ஞம்’ என்ற ஐம்பெரும் கடமைகளை ஹிந்து மதம்  மனித குலம் முழுமைக்கும் கடமையாக நியமித்துள்ளது. தேவ யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம், ஞான யக்ஞம், பித்ரு யக்ஞம் ஆகியவைதான் அது. இந்த வேள்விகளை, கடமைகளை நாம் மறந்ததால் வந்த விளைவுதான் இன்றைய சீரழிவிற்குக் காரணம். எனவே தான் சீரழிவில் இருந்து சீர்திருத்தத்திற்கு இந்த கண்காட்சி ஒரு ஹிந்துவை இட்டுச் செல்ல வேண்டும் என்று நிகழ்ச்சிகளை வடிவமைத்தது.

இதன் அடிப்படையில் கண்காட்சி வளாகத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி கடந்த மூன்று ஆண்டுகளாக விருட்ச வந்தனம், கோ பூஜை, நாக பூஜை, ஐந்தாம் வகுப்பு படிக்கும், பருவத்திற்கு வராத 10 வயது பெண் குழந்தைகள் 1,008 பேரை தெரிவு செது அவர்களுக்கு பெரியவர்கள் மூலம் கன்னிகா வந்தனம் செதல், 1008 பள்ளி ஆசியர்களுக்கு மாணவ மாணவியரைக் கொண்டு ஆச்சார்ய வந்தனம் செதல், பரம் வீர் சக்ர விருது வாங்கிய வீரர்களுக்கு மரியாதை செதல் போன்ற சமுதாயத்தின் கவனத்தை இவை பெரிதும் ஈர்த்துள்ளன. நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த 2016 இறுதிக்குள் 11 மாநிலங்களில் இதுபோன்ற கண்காட்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுவிடும் என்கிறார் அமைப்பாளர்களில் ஒருவர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் எல்லா மாநிலங்களிலும் நடத்தி முடித்த பின்னர் 2020ல் தலைநகர் புதுடெல்லியில் பிரம்மாண்டமா இக்கண்காட்சி நடத்தப்படும் என்கிறார் அவர்.