உலகு முழுதும் ராமாயண ‘முத்திரை’

ஜப்பானின் பிரபல யோயோகி பூங்காவில் ஜப்பானிற்கான இந்திய தூதர் சுஜன் ஆர் சினாய் ‘நமஸ்தே இந்தியா 2017’ கலாச்சார விழாவில் வெளியிட்டார். ஜப்பானிய, இந்திய கலாச்சார குழுக்கள் பங்கேற்ற விழாவில் பேசிய தூதர் சினாய்,  இந்தியா-ஜப்பான் இடையே ஹிந்து-புத்தமத சிந்தனை, தத்துவ கருத்துக்களின் அடிப்படையில் வரலாற்று பிணைப்பு பாரம்பரியமாக நட்பு ரீதியிலான உறவை பகிர்ந்து கொண்டுள்ளது என்றார்.

கடந்த வெள்ளியன்று பிரதமர் மோடி வாராணாசியில் ராமாயண நினைவு அஞ்சல் தலையை வெளியிட்டார். உலகம் முழுவதும் தூதரகங்கள் வெளியிட்டு வருகின்றன. நமஸ்தே இந்தியா விழா 1993ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. வரும் அக்டோபரில் இந்தியாவின் மற்றொரு காப்பியமான மகாபாரதம் நிகழ்ச்சியும்  பிரபல கலைஞர்களால் நடிக்கப்படவுள்ளது என்றும் சினாய் தெரிவித்தார்.