உலகம் போற்றும் ஒரு சொல் குரு

ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட நாடுகள் குரு என்ற பாரத கலாச்சாரச் சொல்லை தங்கள் மொழியில் பெருமிதத்துடன் ஏற்று அகராதியிலும் சேர்த்துள்ளன. அதாவது உலகமே ஒரு குடும்பம் என்ற நம் எண்ணத்தை ஏற்று  சமூக சூழலில் வாழ மனித குலம் ஆசைப்படுகிறது. குருவின் வழிகாட்டலில் வாழ்க்கையை செம்மை செய்து கொள்ளும் தொன்மையான பாரத பாரம்பரியத்தை சிரத்தையோடு உலகம் கவனிக்கிறது. அந்த வெற்றிகரமான  குரு சிஷ்ய பாரம்பரியத்தின்  சில காட்சிகள் இங்கே.

குருவையே பரம்பொருளாகக் கொண்டவர்

மதுரகவியாழ்வார் தன் குருவான நம்மாழ் வாரையே தெய்வம் என மதித்தவர். இவர் பாடிய “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்று ஆரம்ப
மாகும் பத்துப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை இவர் குருவையே பாடினார். திருமாலைக்கூடப் பாட வில்லை. பரமனுக்கும் ஆத்மாவுக்கும் பத்து விதமான சம்பந்தங்கள் உள்ளன. அப்பத்து சம்பந்தங்களையும் குருவிற்கும் சீடனுக்கும் உள்ளதெனப் பணிந்து குருபக்தியை நிலை நாட்டியவர் மதுரகவியாழ்வார்.

கணவனைக் குருவாகக் கொண்டவர்

மகரிஷி யாக்ஞவல்கிய
ருக்கு இரு மனைவிகள். மூத்தவள் காத்யாயினி, இளையவள் மைத்ரேயி, மூத்தவளுக்கு ஆசிரமச் சூழ்
நிலையும் செல்வமும் மிகவும் பிடித்திருந்தன. ஒருநாள் மகரிஷி, “உங்கள் சௌகரியமான வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் இருக்கின்றன. இங்கு சுகமாக இருங்கள். நான் சென்று வருகிறேன்” என்றார். காத்யாயினி சந்தோஷத்துடன் சம்மதித் தாள். ஆனால் மைத்ரேயி, “ஆசிரமத்தில் இவ்வளவு சௌகரியங்கள் இருக்கும் போது ஆசிரமத்தில் நீங்கள் ஏன் எங்கேயோ செல்லவேண்டும்? அதன் ரகசியம் என்ன? என்று கேட்டாள். யாக்ஞவல்கியர், ”நானும் ஒரு சுகத்தைத்தான்  நாடிச்செல்கிறேன். அது பிரம்மானந்தம். ஆனால் அதன் பாதை மிகக் கடினமானது. உங்களுக்கெல்லாம் சரிப்படாது” என்றார். மைத்ரேயியிடமிருந்து உடனே பதில் வந்தது. “எனக்கு இங்குள்ள சுகம் வேண்டாம். என்னை சிஷ்யையாக ஏற்று அழைத்துச் செல்லுங்கள். தாங்கள் பெறும் பிரம்மானந்தத்தில் சிறிதளவாவது எனக்குக் கிடைக்க அருளுங்கள்” அக்கணமே தம்பதி களிடம் குரு–சிஷ்ய பாவம் தோன்றலாயிற்று.

மனைவியை குருவாகக் கொண்டவர்

துளசி
தாசருக்குத் தன் மனைவி மீது அடங்காத அன்பு. அவளை விட்டு அவர் பிரியவே விரும்புவ
தில்லை. அவள் பிறந்த கம் சென்றிருந்தபோது இவருக்கு அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துவிட்டது. பேய் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதை எல்லாம் துளசிதாசர் லட்சியம் செய்யவில்லை. அப்பேர்ப்பட்ட மழை வெள்ளத்தில் நீந்தி வந்தும் இரவானதால் தாளிடப்பட்ட வீட்டுக்குள் அவரால் போகமுடியவில்லை. மதில்மேல் தொங்கிய பாம்பைக் கயிறு என நினைத்து அதைப் பிடித்து ஏறி உள்ளே குதித்து, தன் மனைவி முன் நின்றார். இவ்வளவு கஷ்டப்பட்டு வந்த கணவரைக் கண்ட மனைவி, “எப்படி வந்தீர்கள்!” என்றாள். துளசிதாசர் தாம் வந்த விவரங்களை விவரித்தார். “அடடா! என்ன பேதை மனிதர் நீங்கள்? இந்த அழியும் உடம்பின் மீது இவ்வளவு மோகமா? இந்த ஆவல், இந்த உறுதி இவைகளில் 100ல் ஒரு பங்கு இறைவனிடம் வைத்தால் போதுமே, உங்கள் குறிக்கோள் கேவலம் ஒரு பெண்தானே?”. மனைவி மமதாவிடமிருந்து உபதேசம் கிடைத்துவிட்டது. துளசிதாசரின் ஞானக்கண்கள் திறந்தன.

பாததூளி செய்த உபதேசம்

கபீர்தாஸ் முகமதியராக இருந்தும் இவருக்கு ராமனிடம் அபார பக்தி. இவர் ராமானந்தரைச் சந்தித்து உபதேசம் பெற முனைந்தார். ஆனால், அவரது சீடர்கள் இவரை வேற்று மதத்தவர் என்று அடித்துத் துரத்தி
விட்டனர். ஒருநாள் விடியற்காலையில் ராமானந்தர் கங்கைக்கு ஸ்நானத்திற்கு வரும்போது கபீர் படித்துறையில் படுத்திருந்தார். இருட்டில் கபீரை ராமானந்தர் மிதித்துவிட்டார்.

யாரையோ மிதித்து விட்டோமே என்று வருந்தி ராம ராம”, என்றார். பாததூளி தன் மேல் பட்டதும் அவர், “ராம ராம” என்று சொல்வதையே திருவடி தீக்ஷை அளித்து தனக்கு உபதேசம் செய்துவிட்டதாக கபீர்தாஸ் பக்தி பரவசமானார். ராமானந்தரும் அவரை சீடராக ஏற்றுக்கொண்டார்.

கொடியே குரு

காவிக் கொடியை குருவாகக் கொண்டு ஆண்டுதோறும் வியாச பூர்ணிமா அன்று குரு பூஜை செய்து, குரு தட்சிணை சமர்ப்பிக்கும் மரபு கடந்த 80ஆண்டுக் காலமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் புண்ணியத்தில் உருவாகி யுள்ளது. ஸ்வயம்சேவகர் தேசத்திற்காக,
சமுதாயத்திற்காக சங்கத்தின் வாயிலாக நேரம் தருகிறார், உழைப்பு தருகிறார், தன்னால் ஆன காணிக்கையாக குரு தட்சிணையும் சமர்ப் பிக்கிறார். காவிக்கொடியின் சன்னிதியில் சமர்ப்பணம் முதலிய பண்புகள் அந்த சன்னிதியில் அவரிடம் பதிகிறது. தேசமே இதை பிரமிப்புடன் கவனிக்கிறது.

சமர்ப்பணம்

தஞ்சை பெரிய கோயில் கட்டும்போது பார்வையிட வந்த ராஜராஜ சோழன், சிற்பங்
களை வடிப்பதில் மூழ்கியிருந்த ஸ்தபதியாரின் ஆணைக்கு அடிபணிந்து அவர் தாம்பூலம் போட்டு துப்புவதற்கு தானே பாத்திரத்தை ஏந்திய கதை கேள்விப்பட்டிருப்போம். உலகையே மறந்து அந்த ஸ்தபதியார் தனது தொழிலில் அந்த அளவுக்கு மூழ்கியிருந்தார். அதைத்தான் சமர்ப்பணம் என்று சொல்கிறார்கள். 33 ஆண்டுகள் நூல் எழுதும் பணியில் மூழ்கியிருந்த வாசஸ்பதி மிஸ்ரர் அதன் பின்னரே தன் மனைவியை ஏறெடுத்துப்பார்த்த கதையையும் கேட்டிருப்
போம். வாழ் நாள் நெடுக வாசஸ்பதி தன் தொழிலில் மூழ்கியிருந்ததையும் சமர்ப்பணம் என்போம். பரம பவித்திரமான காவிக்கொடி யிடம் சமர்ப்பணத்தை யாசிக்கிறோம்.

குரு சிஷ்ய உறவு

சொல்லித் தருபவர் குரு. கற்பவர் சிஷ்யன். குருசிஷ்ய உறவு அற்பு தங்களை சாதிக்கிறது. நோபல் பரிசு பெற்ற சி.வி. ராமன் இயற்பியல் மேதை. அவர் ஒலி ஆராய்ச்சி செய்யும்போது மனிதரின் காது அமைப்பு பற்றி அறிய விரும்பினார். அதற்காக பெங்களூரில் ஒரு இளம் டாக்டரை நாடினார். அந்த டாக்டருக்கு வசதியான நேரத்தில் சென்று கற்றுக் கொண்டார் இந்த உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானி. குருவின் ஸ்தானம் அது. நாத்திகரான நெ.து. சுந்தர
வடிவேலு சென்னை பல்கலைக் கழக துணை
வேந்தராக இருந்தவர். அவரது மாணவர் ஒருவர் பிற்காலத்தில் விஞ்ஞானியாகி ஒரு பாக்டீரியாவைக் கண்டறிந்தார். அதற்கு சுந்தர வடிவேலுவின் பெயரைச் சுட்டினார். சிஷ்யனின் குருபக்தி அப்படிப்பட்டது.

லட்சியப்பற்று

ஸ்வயம்சேவகருக்கு, உலகின் பாரதம் குருவாக விளங்க வேண்டும் என்று ஆங்னை அந்த மகோன்னத நிலையை எய்துவது லட்சியம். இடையறாது அவரது மனம் அதில் லயிக்கிறது. அதனால் தனது வாழ்க்கையை அந்த லட்சியத்திற்கு இசைந்த விதத்தில் செதுக்கிப் பொருத்திக் கொள்கிறார். தினசரி செய்கிற பணிகளுக்கான அட்டவணையாக இருக்கலாம், ஆயிரம் காலத்துப் பயிரான திருமணம் போன்ற வைபவமாக இருக்கலாம். சங்கப் பணிக்கு அனுகூலமாக அதையெல்லாம் இசைத்துப் பொருத்திக் கொள்கிற பழக்கம் அவருக்குள் ஊறி விடுகிறது. காவிக் கொடியின் சன்னிதி விசேடம் இது.

காவி பக்தி

தற்போது சென்னை அண்ணா பல்கலைக் கழகம் முன்பு கிண்டி இஞ்சினீயரிங் காலேஜ். அதன் வாயிலில் புல்வெளியில் இரண்டு பேராசிரியர்கள் உட்கார்ந்திருந்தார்கள். சின்னஞ் சிறு காவிக் கொடி முகப்பில் பதித்த ஆட்டோ ஒன்று அந்தப் பக்கமாக வந்தது. ஆட்டோ பயணிக்கு தாடி இருந்தது. தங்களை அறியாமல் இரண்டு பேராசிரியர்களும் எழுந்து நின்று கைகூப்பினார்கள். ஸ்வயம்சேவகரான அந்த ஆட்டோ டிரைவருக்கு காரணம் புரிந்தது. காவிக் கொடி, காவி வண்ணம் ஆகியவற்றுக்கு மக்கள் மனதில் மதிப்பு உண்டு என்று அவருக்குத் தெரியும்.

வேலைப்பாடு

ராஜஸ்தானில் அரசர்கள் சலவைக்கல் கோயில் கட்டுவார்கள். சிற்பிகள் ஒரே கல்லில் ‘பறக்கும் ஈயை எகிறிப்பிடிக்கும் பல்லி’ எல்லாம் சித்தரிப்பார்கள். உளியால் செதுக்காமல் கல்லை ஊசி கொண்டு சுரண்டி எடுத்து சிற்பத்தை முடிப்பார்கள். நிறைய தூள் கொட்டும். தூளுக்கு எடைக்கு எடை அவர்களுக்கு தங்கம் அன்பளிப்பாக கிடைக்கும்.

இந்த நுட்பமான வேலையை வேலைப்பாடு (எக்ஸலன்ஸ்) என்கிறோம். தஞ்சை மாவட்டம் ஊத்துக்
காடு கிருஷ்ணர் கோயிலில் உள்ள காளிங்கநர்த்தன கண்னன் சிலையின் ஊன்றிய கால் பாம்பின் தலை இடையே நூல் நுழையும் இடைவெளி இருக்கும். கண்ணன் நிற்பது மேலெழுந்த பாம்பின் வாலைப் பிடித்தபடி! இதுவும் வேலைப்பாடுதான். வேலைப்பாடே சமர்ப்பணம். இரண்டையுமே தவம் என்று சொல்லலாம். காவிக்கொடியின் காவி வண்ணம் தவத்தில் மூழ்க நம்மை ஊக்குவிக்கிறது.

கட்டுரையாளர் : மூத்த பத்திரிகையாளர்